தனது பிறந்த நாளுக்கு ரசிகர்களுக்கு ட்ரீட் ?

New Project (5)

“லேடி சூப்பர் ஸ்டார்” என்று தனது ரசிகர்களால் பாராட்டப்படுபவர் நடிகை நயன்தாரா. 18்-நவம்பர் இல் பெங்களூரில் பிறந்த இவர் விஜய், அஜித், சூர்யா,ஜெயம் ரவி, விஜய் சேதுபதி, சிவா கார்த்திகேயன் மற்றும் S J சூர்யா மற்றும் பல முன்னணி நடிகர்களின் நடித்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். முதன்முதலில் மலையாள திறையுலகில், சத்யம் அந்திக்காட் இயக்கத்தில் “மனசைனைக்கறே” என்னும் திரைப்படம் மூலம் 2003 இல் அறிமுகமானவர். அதை தொடர்ந்து 2005 இல், ஹரி இயக்கத்தில் நடிகர் சரத்குமாருடன், “ஐயா” திரைபடத்தில் தமிழ் திரையுலகில் கால் தடம் பதித்தவர்.

மேலும் பி. வாசு இயக்கத்தில் நடிகர் ரஜினி காந்துடன் இணைத்து நடித்த ” சந்திரமுகி” திரைப்படம் 100 நாட்கள் கடந்து வசூல் சாதனை படைத்தது. இது இவருக்கு ஒரு பெரிய திருப்பு முனையாக அமைந்தது. கதை தேர்வு செய்வதில் மிகவும் அக்கறை காட்டுபவர் நடிகை நயன்தாரா. தனக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களையே பெரிதும் தேர்ந்துதெடுப்பர்.

அவரின் நடிப்பு திறமை வெளிப்பட்ட இன்னொரு முக்கியமான திரைப்படம் “பில்லா”. இந்த திரைபடம் மூலமாக அவருக்கு ” Tha Glamour Queen of Tamil Cinema” என்ற பட்டத்தை பெற்றவர். மேலும் இவர் வல்லவன், யாரடி நீ மோகினி, ராஜா ராணி, நானும் ரவுடி தான், கள்வனின் காதலி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
2023 இல் அட்லீ இயக்கத்தில், ஷாருகான்னுடன் இணைந்து ஹிந்தியில் “ஜவான்” திரை படத்தில் நடித்து இருந்தார்.

2024 இல் இன்னும் எந்த படமும் வெளியாகாததால் ரசிகர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர். அதனை தீர்க்கும் விதமாகவும் அவர் 40 வது பிறந்த நாளுக்கு ட்ரீட் கொடுக்கும் விதமாகவும் தற்போது செந்தில் நல்லசாமி இயக்கத்தில், ட்ரும்ஸ்டிக் நிறுவனம் தயாரித்து வெளிவர இருக்கும் ” ராக்காயீ” டைட்டில் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திரைபடத்தில் இவர் ஒரு குடிசை வீட்டில் மிளகாய் இடிப்பதாகவும், ரௌடிகள் அவர் வீட்டை சுற்றி வளைப்பதாகவும் ஸ்டார்ட் ஆகிறது. மேலும் குழந்தை ஒருபுறம் ஆழ, அதற்கு பாலாடையில் பால் கொடுத்துவிட்டு, வேட்டைக்கு வருகிறார் நயன்தாரா. மிகவும் வித்யாசமான அரிவாள் மற்றும் ஈட்டியுடன் சேர்த்த ஆயுதம் ஒரு கையிலும், அரிவாள் மற்றோரு கையிலும் வைத்து விளாசுகிறார். மேலும் அவர் உடை மற்றும் அலங்காரங்கள் ரசிகர்கள் பெரிதும் ராசிக்கு விதமாக அமைந்துள்ளது. இத்திரைபடம் மேலும் தெலுங்கு, மலையாளம், கன்னடா மற்றும் ஹிந்தி இல் மேக்கிங் செய்யப்பட்டு வருகிறது.

இதை தொடர்ந்து இவர் டெஸ்ட், மண்ணாங்கட்டி, ராக்கி மற்றும் பல திரை படங்களில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed