ஜெயிலர் 2 படத்தில் இவங்கதான் ஹீரோயினா… நல்ல காம்பினேஷன் தான்..

சூப்பர் ஸ்டார் என்ற பெரும் அந்தஸ்தோடு தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவரது படங்கள் தொடர்ந்து ரிலீஸாகி கொண்டே இருப்பது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன லால் சலாம் மற்றும் வேட்டையன் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை படக்குழு அடுத்த ஆண்டு கோடையில் ரிலீஸ் செய்யபோவதாக திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் 2 படம் தொடங்க நெல்சன் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. கடந்த ஆண்டு ஜெயிலர் படம் ரிலீஸ் ஆகி பெரும் ஹிட் அடித்தது என்ற. தனது மகன் இழப்பிற்கு காரணம் தேடி அவர்களை பழிவாங்கும் தந்தையாக நடித்திருந்தார் சூப்பர்ஸ்டார். பிறகு உண்மை தெரிந்து அவர் எடுத்த முடிவுகளை கருவாக கொண்டு படம் நடந்தது. இத்திரைப்படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில் போன்ற பல பிரபலங்கள் நடித்து இருந்தனர். அனிருத் படத்திற்கு இசையமைத்திருந்தார். பாடல்கள் எல்லாமே தற்போது ரசிகர்களால் கொண்டாப்பட்டு வருகிறது. “ரா நு காவாலியா” பாடலில் தமன்னாவின் டான்ஸ் எல்லாரும் பேசப்பட்டது.
Ramya krishnan Rajinikanth
தற்போது ஜெயிலர் 2 படத்தில் ஸ்கிரிப்ட் தயாரிப்பதில் நெல்சன் பிஸியாக இருப்பதாகவும், அதற்கான வேலைகளை மற்றும் நடிகர் நடிகைகள் தேர்வு செய்வது போன்றவற்றில் ஈடுபட்டிருப்பதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படப்பிடிப்பு வரும் மார்ச்சில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
srinidhi Shetty
மேலும் படத்தின் லீட் ரோலில் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கவுள்ளதாகவும், மனைவி ரோல் மற்றும் மருமகள் ரோலில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா இந்த படத்திலும் இணையவுள்ளதாக தெரிகிறது. அடுத்த பிளாக் பஸ்டர் திரைப்படத்திற்கு ரசிகர்களை தயார் செய்கிறார் நெல்சன். https://cinemazotamil.com/sivakarthikeyan-chess-champ-gukesh/