Mohan G: இது மோகன் ஜிக்குத்தான் அவமானம்.. அவருக்கு ஒரே ஒரு சாய்ஸ்தான் இருக்கு
mohang
Mohan G:
மோகன்ஜி இயக்கத்தில் திரௌபதி 2 திரைப்படம் வெளியாக இருக்கின்றது. அந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான். அந்தப் படத்தில் சின்மயி ஒரு பாடலை பாடியுள்ளார். சமீபத்தில் அந்த படத்தில் பாடியது தவறு. மோகன் ஜி சித்தாந்தம் தெரியாமல் நான் அந்த படத்தில் பாடிவிட்டேன். மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என சின்மயி கூறி இருக்கிறார். இது பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. மியூசிக் டைரக்டர் அழைத்ததால்தான் நான் போனேன், மோகன் ஜியை யாருனே எனக்கு தெரியாது. ஜிப்ரான் அழைத்தார் நான் போனேன் பாடினேன்.
அந்த பாடலும் சூப்பர் ஹிட் ஆகிவிட்டது.ஆனால் சமூக வலைதளங்களில் எனக்கு எதிராக கேள்விகள் வருகிறது. பெண்களை மோசமாக சித்தரிக்க கூடிய மோகன் ஜி படத்தில் பெண்ணுரிமை பேசுகிற சின்மயி பாடலாமா என கேட்கிறார்கள். இதன் பிறகுதான் சின்மயிக்கு தெரிய வருகிறது. மோகன் ஜி முழுக்க முழுக்க உயர் ஜாதி பெண்களை பட்டியலின ஆண்கள் கடத்திக் கொண்டு போகிறார்கள், இது ஒரு நாடகக் காதல், பெண்களை வலை வீசக் கூடியவர்கள் அப்படின்னு படங்களை எடுக்கிறார். சமூக அமைதியை சீர்குலைக்கிற கருத்துக்கள் கொண்டவராக இருக்கிறார்.
அடிப்படையில் சாதியவாத நச்சு கருத்துக்களை பரப்பக்கூடிய ஒரு நல்லிணக்கத்தை விரும்பாதவராக இருக்கிறார். நம்ம பிள்ளையை கூட்டிட்டு போயிட்டான்டா, சும்மா விடக்கூடாதுடா, அப்படின்னு சொல்லக்கூடிய படங்களை உசுப்பேற்றுகிற படங்களை ஆணவ படுகொலையை தூண்டுகிற கருத்துக்களை திரைப்படங்களில் காட்டுகிறார். தியேட்டர் என்பது குறிப்பிட்ட ஜாதிக்காரர்கள் மட்டும் வரக்கூடிய இடம் கிடையாது. எல்லா ஜாதிகாரர்களும் வரக்கூடிய இடமாக இருக்கிறது. இவங்க என்ன ஆளுங்க, அப்படின்னு பார்த்து யாரும் படம் பார்க்க வருவதில்லை.
அப்படின்னு பார்த்தால் இசையமைப்பாளர் இளையராஜா போன்ற மகத்தான இசை கலைஞர்கள் நமக்கு கிடைத்திருக்க மாட்டார்கள். ஏற்கனவே மோகன் ஜி மீது பல குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. பல பேரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பணத்தை கொடுக்கவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. திரௌபதி என்பது வன்னியர் சமூகத்தில் வழிபடக்கூடிய ஒரு பெண் தெய்வம். அப்படித்தான் எங்களுடைய குல பெண்கள். அப்படிப்பட்டவர்களை கடத்திட்டு போய்விடுகிறார்கள் என்பது மாதிரியான கதையை அவர் எடுக்கிறார். தன் வீட்டுப் பெண்களை வேறொரு ஜாதி ஆண்கள் திருமணம் செய்யும் போது அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் படும் பதற்றம் போராட்டம் இவற்றை மையப்படுத்தி இவருடைய படங்கள் வருகின்றன.
அப்படி பார்க்கும் பொழுது அவருடைய படங்கள் வெற்றியே பெறவில்லை. இது சர்ச்சைக்குரிய படம் என்பதால் சில பேர் அதை பார்த்து விடுகிறார்கள். ஒடிடி தளங்களில் திரௌபதி படம் இருக்கிறது. ஏற்கனவே அவர் படத்தில் நடித்த ஒரு கதாநாயகி அவரைப் பற்றி தெரியாமல் நடித்து விட்டேன் எனக் கூறி இருந்தார். இப்போது அதே மாதிரி ஒரு முன்னணி பிரபல பாடகி சின்மயி அதே மாதிரியான ஒரு கருத்தை கூறியிருக்கிறார். இது மோகன் ஜிக்கு ஏற்படுகிற அவமானம். இப்படி இருக்கும் பொழுது அவருக்கு எப்படி பெருமிதம் கிடைக்கும்?

அவருக்கு பெருமிதம் கிடைக்க வேண்டும் என்றால் அவர் ஒரு குறுகிய வட்டத்தில் இருக்கிறார். அதை கடந்து மோகன் ஜி எல்லா சமூக மக்களுக்குமான படத்தையும் எடுக்க வேண்டும். ஒரு கலைஞனாக தன் வாழ்நாளில் சாதியை நம்பக்கூடியவனாக இருந்து விட்டேன், ஒரு குறுகிய மனப்பான்மை கொண்டவனாக இருந்து விட்டேன், அதிலிருந்து நான் வெளியில் வந்து விட்டேன் என்று சொன்னால் தான் அவருக்கு பெருமை. அதை விட்டுவிட்டு என்னுடைய சித்தாந்தம் தான் சிறந்த சித்தாந்தம். நீங்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை அப்படின்னு அவர் நமக்கு பாடம் எடுக்கிறார் என்றால் அவருக்கு அது மேலும் மேலும் அவமானம் தான் அசிங்கம் தான் என கவிஞர் ராஜகம்பீரன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.