Vijay: விஜயுடன் ஆட மறுத்த நடிகர்.. கட் பண்ணா அந்த பாட்டுதான் சூப்பர் டூப்பர் ஹிட்

vijay (4)

vijay (4)

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக கிட்டத்தட்ட பல வருடங்களாக மாஸ் காட்டி வருபவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஜய் முதல் படம் அவருக்கு சரியான வரவேற்பை பெறவில்லை. எப்படியாவது தன் மகனை இந்த சினிமாவில் நல்ல நிலைமைக்கு கொண்டு வர வேண்டும் என விஜயின் தந்தை எஸ்.ஏ.சி பல முயற்சிகளை மேற்கொண்டார்,

ஒரு கட்டத்தில் விஜயை வைத்து எஸ்.ஏ.சியே படங்களை இயக்கினார். அவர் இயக்கிய படங்கல் அடல்ட் படங்களாக இருந்ததால் ஆரம்பத்தில் விஜய் மீது பல விமர்சனங்கள் எழுந்தன. அதனால் விஜயை சரியான நேரம் பார்த்து புரோமோட் செய்ய வேண்டும் என காத்திருந்தார் எஸ்.ஏ.சி. அப்போதுதான் செந்தூரப்பாண்டி படம் அவருக்கு அமைந்தது. அதில் ஒரு பெரிய ஹீரோவை நடிக்க வைத்தால் அது விஜய்க்கு ஆதரவாக இருக்கும் என எஸ்.ஏ.சி அப்போது இருந்த பல முன்னணி நடிகர்களிடம் கேட்டிருக்கிறார்.

ஆனால் யாருமே முன்வரவில்லை. விஜயகாந்த் மட்டும்தான் எஸ்.ஏ.சிக்காக ஓடி வந்தார். அதுவும் சம்பளம் இல்லாமல் நடித்துக் கொடுத்தார். அதோடு அந்தப் படம் மாபெரும் வெற்றியடைய விஜய்க்கு ஒரு ஸ்டெப்பிங் ஸ்டோனாக அமைந்தது. அதிலிருந்து விஜய்க்கு ஒரே ஏறுமுகம்தான். தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுக்க ஆரம்பித்தார். இளையதளபதி, தளபதி என அடுத்தடுத்து முன்னேறிக் கொண்டிருந்தார் விஜய்.

ஆரம்பத்தில் இருந்து விஜய் தான் நடிக்கும் படங்களில் எப்படியாவது ஒரு பாடலை பாடிவிடுவார். அதுமட்டுமில்லாமல் அவருடைய நடனமும் அந்தப் படத்தில் பெரிய ஹைலைட்டாக பார்க்கப்படும். அவர் நடனத்திற்காகவே கண்டிப்பாக ஒரு பாடல் ரெக்கார்டு செய்யப்படும். இன்று வரை தமிழ் சினிமாவில் விஜய் அளவுக்கு எந்த ஹீரோவும் கிரேஸாகவும் ஸ்டைலாகவும் நடனம் ஆடியதாக இல்லை.

pokkiri
pokkiri

அப்படி ஒரு ஸ்டைல் விஜயின் நடனத்தில் இருக்கும். இந்த நிலையில் போக்கிரி படத்தில் போக்கிரி பொங்கல் பாடலில் ஒரு சீனில் விஜயும் பிரபுதேவாவும் சேர்ந்து நடனமாடுவார்கள். ஆனால் முதலில் பிரபுதேவா ஆட மறுத்திருக்கிறார். எப்படியாவது இந்த பாடலில் பிரபுதேவாவுடன் சேர்ந்து ஆட வேண்டும் என விஜய் ஆசைப்பட்டிருக்கிறார். நடிகர் வையாபுரி பிரபுதேவாவின் நெருங்கிய நண்பர் என்பதால் விஜய் வையாபுரியிடம் தனது ஆசையை கூறியிருக்கிறார்.

வையாபுரியும் நடிகர் ஸ்ரீமனும் சேர்ந்து விஜயின் ஆசையை பிரபுதேவாவிடம் கூற, முடியாது முடியாது. நானும் விஜயும் ஒன்றாக தோன்ற முடியாது என பிரபுதேவா கூறியுள்ளார். ஆனால் எப்படியோ வையாபுரியும் ஸ்ரீமனும் பிரபுதேவாவை சம்மதிக்க வைத்திருக்கின்றனர். இதை ஒரு பேட்டியில் வையாபுரி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed