அஜித்துடன் இப்படியொரு பிரச்சனையா ? கோபத்தில் கொந்தளித்த லைலா..

அஜித்துடன் இப்படியொரு பிரச்சனையா ? கோபத்தில் கொந்தளித்த லைலா..
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் லைலா. இவர் அஜித், சூர்யா, விக்ரம் மற்றும் முன்னணி நடிகருடன் நடித்து பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறார். அவருடைய குழந்தைத்தனமான சிரிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர். “பிதாமகன்” படத்தில் நடித்த காமெடி சீன்கள் இன்றுவரை பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. “உன்னை நினைத்து” படத்தில் சூர்யாவிற்கு பதிலாக விஜய் நடிக்க இருந்தது ஆனால் சில பல காரணங்களால் அவரால் அதில் நடிக்க முடியாமல் போனது. சமீபத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த கோட் திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் இதன் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜயுடன் இந்த படத்தில் சேர்ந்து நடித்திருந்தார் நடிகை லைலா. இதனை அவர் ஒரு பேட்டியில் எல்லா நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து விட்டேன் உங்களுடன் மட்டும் தான் சேர்ந்து நடிக்கவில்லை இந்த படத்தின் மூலம் அது நிறைவேறிவிட்டது என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இந்நிலையில் அஜித் பற்றி லைலாவிடம் கேட்டதற்கு நான் இன்னும் அவர் மேல் கோபமாக தான் இருக்கிறேன் ஏனென்றால் அவர் எல்லோருக்கும் பிரியாணி செய்து கொடுத்துள்ளார் ஆனால் எனக்கு மட்டும் ஒருமுறை கூட பிரியாணி சமைத்து கொடுத்ததில்லை என்று தனது கோபத்தை சிரித்துக் கொண்டே வெளிப்படுத்தியுள்ளார்.