இதெல்லாம் பாக்கும் போது கலங்குதுய்யா.. மனைவியை எப்படி கொண்டாடுறாரு பாருங்க ரஹ்மான்

rahman
நேற்று ஒரு திடீர் அறிவிப்பு. 29 ஆண்டு கால வாழ்க்கையில் இருந்து விடுபட இருக்கிறேன். எங்களுடைய பிரைவேசியை மதித்து நடக்கவும் என பிரபல இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் மனைவி சாயிரா அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து ஒட்டுமொத்த மீடியாவும் ஏஆர் ரஹ்மான் மீது திரும்பியது. இதை பற்றி ரஹ்மான் எதுவும் அறிவிக்கவில்லையே என்று எதிர்பார்க்கும் போது இன்று காலை ரஹ்மானும் அவருடைய எக்ஸ் தள பக்கத்தில் விவாகரத்து பற்றி கூறியிருந்தார்.
1995 ஆம் ஆண்டு ரஹ்மானின் அம்மா பார்த்து திருமணம் செய்து வைத்த பெண்தான் சாயிரா. இவருக்கு தமிழ் அந்தளவுக்கு பேச வராது. மேடையில் ஏறும் போது பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் பேசுவார். அப்போது கூட ஏஆர் ரஹ்மான் ஒழுங்கா தமிழில் பேசு என கிண்டலாக கூறுவார். இந்த மாதிரி சின்ன சின்ன குறும்புகள் இவர்களிடத்தில் பார்த்திருக்கிறோம்.
இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டித்தான் வந்தனர். ஆனால் திடீரென இந்த முடிவை கேட்டதும் அனைவருக்கும் அதிர்ச்சி. இவர்களுக்கு திருமணமாகி இரு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள். இவருடைய மூத்த மகளுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்தது. இப்படி இவர்கள் வாழ்க்கை எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல்தான் சென்றுகொண்டிருந்தது.

எங்களுக்குண்டான இடைவெளிதான் காரணம் என சாயிரா அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் பழைய நினைவுகள் என்ற வகையில் ஏஆர் ரஹ்மானின் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ஏஆர் ரஹ்மானுக்கு விருது வழங்கப்பட அதை வாங்கியதும் என் வாய்ஸுக்கு மிகப்பெரிய ரசிகை என் மனைவிதான். அதனால் அவங்க வந்து இந்த விருதை வாங்கட்டும் என கூறியிருப்பார்.
இதை சற்றும் எதிர்பாராத ரஹ்மான் மனைவி ஓடி வந்து மேடைக்கு வர அவருடைய வாய்ஸ்னால்தான் காதலில் விழுந்தேன் என்று கூறியிருப்பார். அந்த வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் அவர்கள் மீண்டும் ஒன்று சேர இறைவனை பிரார்த்திக்கிறோம் என கூறி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://x.com/LetsXOtt/status/1858929965104050662?t=FJRLURkvW_fVHyWjlHYDhQ&s=08