OTT-ல் இந்த வாரம் வெளியாகும் படங்கள் – முழு விவரங்கள்

OTT update

திரையரங்குகளை தாண்டி OTT தளங்கள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. படம் பார்க்கும் முறையில் மாற்றம் கொண்டு வந்த OTT தளங்கள், வாரம் தோறும் புதிய படங்கள் மற்றும் வெப் தொடர்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

ஒவ்வொரு வாரத்தின் இறுதியிலும் OTT தளங்களில் புதிய வெளியீடுகளுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். இந்த வாரம் வெளியாகும் முக்கிய படங்களின் விவரங்கள் :

லக்கி பாஸ்கர்

துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம், ஒரு முக்கிய திருப்பத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது. திருட்டு செயலில் ஈடுபடும் துல்கர், ஒரு கட்டத்தில் தனது செயலின் தீமையை உணர்கிறார். அதிலிருந்து தப்பிக்க அவர் எடுக்கும் முடிவுகள் மற்றும் அதனைச் சார்ந்த பிரச்சனைகள் தான் மீதிக்கதை.

இந்த திரைப்படம் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று, 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘மகாநதி’ மற்றும் ‘சீதா ராமம்’ ஆகிய படங்கள் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றன. இவை அவரது நடிப்புத் திறனை மேலும் உயர்த்தியவை.

‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் புது அளவுகோல்களை உருவாக்கி, துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் முக்கியமான படியாக அமைந்துள்ளது.

Lucky Baskhar

திரைப்படம்: லக்கி பாஸ்கர்
இயக்கம்: வெங்கி அட்லுரி
நடிப்பு: துல்கர் சல்மான்
OTT Platform: நெட்பிளிக்ஸ் (Netflix)
வெளியீடு தேதி: 28 நவம்பர் 24

Lucky baskhar

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது, படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் ரசிகர்கள் வீட்டீலிருந்து பார்க்கலாம்.


“பிரதர்”
எம். ராஜேஷ் இயக்கிய தமிழ் நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும். ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம், அக்டோபர் 31, 2024 அன்று தீபாவளி பண்டிகையையொட்டி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது.
வெளியீட்டுக்கு பிறகு, ‘பிரதர்’ நேர்மறையான விமர்சனங்களையும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டுகளையும் பெற்றது.
படம், குடும்பத்துடன் பார்க்க ஏற்ற நகைச்சுவை மற்றும் நெகிழ்ச்சியான காட்சிகளால் ரசிகர்களின் மனதை கவர்ந்தது.
இதனால் வலுவான பாக்ஸ் ஆபிஸ் வெற்றியைப் பெற்றது.

Brother Movie ott release date

திரைப்படம்: பிரதர்
இயக்கம்: நந்தகோபால்
நடிப்பு: ஜெயம் ரவி
OTT PLATFORM : ஜீ5 (ZEE5)
வெளியீடு தேதி: 29 நவம்பர்

ஜெயம் ரவி நடிப்பில், குடும்ப பாசம் மற்றும் திருப்பங்களுடன் உருவான இந்த திரைப்படம், ஜீ5  (ZEE 5) OTT தளத்தில் நாளை முதல் வெளிவரவிருக்கிறது.


திரைப்படம்: பிளடி பெக்கர்

டைரக்டர் :M. சிவபாலன்
ரைட்டர் :M. சிவபாலன்
ஸ்டார்ஸ் :கவின் , ராதா ரவி ,ரெடின் கிங்ஸ்லி

OTT release date for Bloody Beggar movie

ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தில் நடிகர் கவின் பிச்சைக்காரனாக சிறப்பாக நடித்து நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருந்தார். இது நெல்சன் திலீப்குமாரின் தயாரிப்பில் வந்த முதல் படம் என்றாலும், எதிர்பார்த்த அளவில் திரையரங்குகளில் ஓடவில்லை.இப்படம் ‘அமரன்’ படத்தின் அதிரடி வெற்றியின் தாக்கம் காரணமாக ரசிகர்கள் மத்தியில் பார்வையாளர்களை கவர முடியவில்லை.
‘ப்ளடி பெக்கர்’ திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே திரையரங்குகளில் இருந்து நீக்கப்பட்டது.
இருந்தும், இது ஒரு வரையளவில் ₹10 கோடி வரை வசூல் செய்து தன்னிடமிருந்த அளவிற்கு தாக்குப்பிடித்தது.

Bloddy beggar Heroin

திரைப்படம்: பிளடி பெக்கர்
இயக்கம்: சிவபாலன் முத்துகுமார்
நடிப்பு: கவின்
OTT Platform: அமேசான் பிரைம்,சன் நெக்ஸ்ட்
வெளியீடு தேதி: 28 நவம்பர்
நெல்சன் திலிப்குமாரின் உதவி இயக்குனராக இருந்த சிவபாலன் இயக்கிய இப்படம், டார்க் காமெடி அம்சங்களில் கவினின் பிரமாதமான நடிப்புடன் உருவாகியுள்ளது. இரு பிரபல OTT தளங்களில் இன்று முதல் வெளியாகியுள்ளது.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed