ஜிவி தனுஷ்னா சும்மாவா? சுட சுட விருந்து படைக்க போகும் இட்லி கடை!..
வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் டவுன் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் படமான “இட்லி கடை” திரைப்படத்தை வரும் ஏப்ரல் 10 ஆம் தேதியில் வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் ஹீரோ தனுஷ் ஆவார். மேலும் நித்யா மேனன், ஷாலினி பாண்டே, அருண் விஜய் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் தனது மொத்த திறமையும் வெளிப்படுத்தி படத்திற்கு இசையமைத்துள்ளார். “சொல்லாத காதலை சொல்ல வந்தாய்” மற்றும் “விண்ணை விட்டு வெண்ணிலவு விடை கேட்டால் வானம் நினையாத” பாடல்கள் வெளிவந்து ஹிட் கொடுத்துள்ளது.
மேலும் படத்தின் டீசருக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இத்திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடையும் என ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.