தமிழில் இருந்து பாலிவுட்டிற்கு நடிகர்களை ஏற்றுமதி செய்யும் அட்லீ.. யோகிபாபு வரிசையில் மற்றுமொரு நடிகர்
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருப்பவர் இயக்குனர் அட்லி. ராஜா ராணி படத்தின் மூலம் முதன்முதலில் இயக்குனராக அறிமுகமானவர். முதல் படத்தில் தான் யார் என்பதை நிரூபித்தார். இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லி ஷங்கருடன் இணைந்து பல படங்களில் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக எந்திரன், நண்பன் போன்ற படங்களில் எல்லாம் இவர் உதவி இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்.
ராஜா ராணி படத்திற்கு பிறகு தொடர்ந்து விஜயை வைத்து மூன்று படங்களை இயக்கி ஒரு கமர்ஷியல் இயக்குனர் என்ற பெயரையும் எடுத்தார் அட்லி. அது மட்டுமல்ல விஜயை திரையில் ஒரு கமர்ஷியல் ஹீரோவாக காட்ட வேண்டும் என்றால் அது அட்லியால் தான் முடியும் என்ற அளவுக்கு ரசிகர்கள் அவர் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தனர். இந்த நம்பிக்கை தான் பீஸ்ட் பட விமர்சனத்தின் போது எதிரொலித்தது.
பீஸ்ட் திரைப்படம் வசூலில் சாதனை படைத்தாலும் விமர்சன ரீதியாக தோல்வியை தான் தழுவியது. அந்த நேரத்தில் ரசிகர்கள் அனைவரும் அட்லீயை வைத்து படத்தை இயக்கி இருக்கலாம் என்றுதான் கூறி வந்தனர். இப்படி விஜயை ஒரு மாஸ் ஹீரோவாக காட்ட அட்லியால் தான் முடியும் என்ற அளவுக்கு அட்லியை கொண்டாடினர் தமிழ் ரசிகர்கள். ஆனால் அடுத்தடுத்து தமிழில் பெரிய பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுப்பார் என்ற ரசிகர்களின் நம்பிக்கையை சுக்குநூறாக்கினார் அட்லி.
அப்படியே பாலிவுட் பக்கம் நுழைந்து ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தைக் கொடுத்து இப்போது மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார். அடுத்ததாக வருண் தவான் நடிப்பில் பேபி ஜான் என்ற படத்தை தயாரித்ததில் ஒரு தயாரிப்பாளராகவும் களமிறங்கி இருக்கிறார் அட்லி. இந்த படத்திற்கு பிறகு தமிழிலும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை தயாரிக்கப் போவதாக ஒரு செய்தி வெளியாகிக் கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் ஜவான் படத்தின் மூலம் யோகி பாபுவை பாலிவுட்டில் அறிமுகபடுத்தினார் அட்லீ. இப்பொழுது பேபி ஜான் படத்திலும் காமெடி நடிகர் காளி வெங்கட்டை அறிமுகப்படுத்தி இருக்கிறார் அட்லி. இப்படி தமிழில் இருந்து அடுத்தடுத்து நடிகர்களை பாலிவுட் பக்கம் இழுத்து வருகிறார். இது ஒரு நல்ல முயற்சி என்றாலும் கொஞ்சம் தமிழிலும் அவர் படத்தை இயக்க வேண்டும் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டு வருகின்றனர்.