உங்க படத்துல வேலை செஞ்சிருக்கேன்.. கே எஸ் ரவிக்குமாரை திடுக்கிட வைத்த சூரி
காமெடி நடிகராக இருந்து கதை நாயனாக முன்னேறி இருக்கும் நடிகர்களுள் பரோட்டா சூரியும் அடக்கம். இவர் வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில்கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். இவர் பல திரைப்படங்களில் சப்போர்டிங் ரோல்களில் நடித்து தனது விடாமுயற்சியின் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி தமிழ் திரையுலகில் தன்னை நிலைநாட்டி கொண்டவர். இவரது விடுதலை 2 திரைப்படம் திரைக்கு வந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்ற கேரக்டரிலும், சூரி கான்ஸ்டபிளாகவும் மற்றும் படத்தின் நாயகனாகவும் நடித்திருந்தார். இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சு வாரியர், போஸ் வெங்கட், சேத்தன், இளவரசு, பாலாஜி சக்திவேல் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான கே எஸ் ரவிக்குமார், சமீப காலமாக பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் “கே எஸ் ஆர் ஷோ” நிகழ்ச்சியின் மூலம் திரைப்படக் குழுவினர்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்நிகழ்ச்சியின் மூலமாக சமீபத்தில் விடுதலை 2 பட குழுவினருடன் நேர்காணல் இருந்தது. இதில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் மற்றும் பரோட்டா சூரி போன்றோர் கலந்து கொண்டனர்.
இதில் மூவரும் விடுதலை2 படத்தினை பற்றியும் மற்றும் தங்களது வாழ்வில் நடந்த சில சுவாரசியமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர். இதில் சூரி, கே எஸ் ரவிக்குமாரிடம் “நன் உங்க படத்துல ஏற்கனவே ஒர்க் பண்ணி இருக்கேன் சார். படையப்பா, வில்லன், வரலாறு பட ஷூட்டிங்ல பேன் போடுறது மைக் புடிக்குறது மாதிரியான பல வேலைகளை செஞ்சு இருக்கேன் சார்” என்று வெளிப்படையாக போட்டு உடைத்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.