அடிக்கட்டுமா? தன்னுடைய செருப்பு சைஸை கூறி நடிகரை லெஃப்ட் ரைட் வாங்கிய குஷ்பூ
தமிழ் சினிமாவில் 90கள் காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை குஷ்பூ. சின்னத்தம்பி படத்தில் நந்தினி என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்களிடம் பிரபலமானார் குஷ்பூ. வருஷம் 16 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான குஷ்பூ தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக மாறினார்.
பல படங்களில் நடித்து புகழ்பெற்ற குஷ்பூ இப்போது அரசியலில் ஈடுபட்டு செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்டு அங்கு நடந்த விவாதத்தில் பங்கேற்றார். திரைத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை பற்றி பேசிய குஷ்பூ தன் வாழ்க்கையில் நடந்த சில அனுபவங்களை பற்றி கூறினார்.
அதாவது குஷ்பூ சினிமாவிற்குள் நுழைந்த புதிதில் ஒரு பெரிய ஹீரோ தன்னிடம் தவறான நோக்கத்தில் நடந்து கொண்டதாக கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அந்த நடிகரிடம் தன் காலணியை காண்பித்து எச்சரித்ததாகவும் அதன் பின் அந்த ஹீரோ தொல்லை செய்யவில்லை என்றும் கூறினார். பிறர் தம்மிடம் வந்து தவறாக நடந்து கொள்ளும் போது அதை பற்றி வெளிப்படையாக பேச பெண்கள் முன்வர வேண்டும் என்றும் குஷ்பூ கூறினார்.
இது எல்லாவற்றையும் விட தமக்கு சுயமரியாதைதான் முக்கியம் என்றும் நம்மை நாம் மதித்தால்தான் பிறர் நம்மை மதிப்பார்கள் என்றும் குஷ்பூ தெரிவித்தார். குஷ்பூ கூறிய இந்த கருத்து பெண்கள் மத்தியில் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது குஷ்பூ அரசியலையும் தாண்டி அவ்வப்போது இன்ஸ்டாவில் தான் சமைக்கும் உணவுகளை பற்றியும் வீடியோக்கள் போட்டு ரசிகர்களுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார்.