பிவி சிந்து திருமண வரவேற்பில் ஷாலினியிடம் அஜித் நடந்து கொண்ட விதம்.. வைரலாகும் வீடியோ
Ajith:
இன்று சினிமாவில் பல பேருக்கு முன்னுதாரணமாக இருக்கும் ஜோடி என்றால் அது அஜித் ஷாலினி ஜோடி தான். ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்ட அஜித் கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கும் மேலாக அவருடைய மனைவியான ஷாலினியை சந்தோஷமாக வைத்திருக்கிறார். அதை அவர்கள் இருவரும் அவ்வப்போது அவுட்டிங் போகும் புகைப்படங்களை பார்க்கும் போதே நன்றாக நமக்கு தெரிகிறது.
இவர்களுக்கு அனௌஸ்க்கா என்ற மகளும் ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வந்தவர் அஜித். ஆரம்பத்தில் ஏகப்பட்ட கஷ்டங்களையும் போராட்டங்களையும் பார்த்தவர். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஒரு உச்ச நடிகராக திகழ்ந்திருக்கிறார். முதலில் ஒரு சரியான வழிமுறை இல்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்டார் அஜித் என்று தான் சொல்ல வேண்டும்.
தன் கையே தனக்குதவி:
ஒவ்வொரு முறை அவர் விழும் போதும் தானாகவே எழுந்து தன் கையே தனக்குதவி என்பதைப் போல வாழ்ந்து இன்று ஒரு மிகப்பெரிய அந்தஸ்தை அடைந்திருக்கிறார் அஜித். ஒரு பக்கம் சினிமா, இன்னொரு பக்கம் அவருடைய பேஷனான கார் ரேஸ் பைக் ரேஸ் இன்னொரு பக்கம் குடும்பம் என கவனித்து வருகிறார். தற்போது அஜித் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு அதன் பிறகு குட் பேட் அக்லி படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
குட் பேட் அக்லி திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் அதற்கு அடுத்தபடியாக கார் ரேஸில் கலந்து கொள்ள இருக்கிறார். எந்த ஒரு பொது விழாக்களிலும் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத அஜித் தற்போது இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பிவி சிந்து திருமண வரவேற்பில் கலந்து கொண்டிருக்கிறார். அது சம்பந்தமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மனைவியிடம் காட்டிய அக்கறை:
மிகவும் அழகாக ஒரு வெளிநாட்டு நபரை போல ஸ்மார்ட் ஆக வந்து இருக்கிறார் அஜித். அது மட்டும் அல்லாமல் தன்னுடைய மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகள் இருவரையும் எந்த அளவு அரவணைத்து அந்த விழாவிற்கு கொண்டு போனார் என்பதும் இந்த வீடியோவில் பதிவாகி இருக்கின்றது. கார் அருகில் வந்ததும் பவுன்சர்கள் உடன் இருந்தும் அவர்களை எல்லாம் தள்ளி விட்டு ஓடி வந்த அஜித் தன் மகளையும் தன் மனைவியையும் காரில் ஏற்றி விட்டு அதன் பிறகு அவர் ஏரி உட்காரும் அந்த காட்சி வீடியோவில் பதிவாகி இருக்கிறது. இந்த ஒரு வீடியோ தான் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து இருக்கிறது.
இதோ அந்த வீடியோ லிங்க்: https://x.com/AjithFansTrendX/status/1871754721368924623