பொறந்த வீட்ட விட்டுக் கொடுக்காத அல்லு அர்ஜூன்.. கோலிவுட்டுக்கு இது ஒரு நல்ல பாடம்
2021 ஆம் ஆண்டு தெலுங்கில், சுகுமார் இயக்கத்தில்,மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் மட்டம்ஷெட்டி மீடியா தயாரிப்பில் நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த ஆக்சன் திரைப்படம் “புஷ்பா தி ரைஸ்”. இத்திரைப்படத்தில் சந்தன மரம் வெட்டும் ஒரு சாதாரண கூலி தன் திறமையின் மூலம் சிண்டிகேட்டை உருவாக்குவது தான் இத்திரைப்படத்தின் கருவாக இருந்தது. திரைப்படத்தில் பஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகதீஷ் பரத் இணைந்து நடித்திருந்தனர். மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
அதனை தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகமான “புஷ்பா தி ரூல்” வரும் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ளது. அல்லு அர்ஜுன் பிரபல பேட்டி ஒன்றில், “எனக்கு ஹிந்தி நல்லா தெரியும். ஒவ்வொரு மொழியில புஷ்பா பட ட்ரெய்லர் டீசர் நான் பார்ப்பேன் எந்த மொழியில் நல்லா பண்ணி இருக்காங்கனு, “தமிழ்ல தான் சூப்பரா பண்ணி இருப்பாங்க மற்றும் தமிழ்ல தான் கச்சிதமா டப்பிங் பண்ணி இருப்பாங்க” என்று தெரிவித்திருந்தார்.
மேலும் புஷ்பா 2 பட ப்ரோமோஷனில் , “என் தமிழ் மக்களே வணக்கம். நான் பிறந்த இந்த மண்ணுக்கு அன்பான வணக்கம். நான் சினிமாவில் 20 வருஷம் இருக்கேன். படத்தோட ப்ரமோஷனுக்கு எல்லா ஊருக்கும் போயிருக்கேன். ஆனா நான் பிறந்த தமிழ்நாட்டுக்கு வரும்போது இருக்க உணர்வும் சந்தோஷமும் வேற. என்னோட முதல் 20 வருஷம் சென்னையில் தான் வாழ்ந்தேன்.
எவ்வளவு படம் நடித்திருந்தாலும் எவ்வளவு உயரத்துக்கு போனாலும், நான் ஒரு சாதாரண டி நகரில் பிறந்த பக்கா சென்னை பையன் தான். நீங்க எல்லாரும் தெலுங்கு தான், ஆனால் நான் தமிழ்ல ஏன் பேசுறேன் தெரியுமா அது இந்த மண்ணுக்கு கொடுக்கிற மரியாதை. நாம எந்த மண்ணுல நிக்கிறோமோ அந்த மண்ணுக்குச் சொந்தமான மொழியில் தான் பேசணும். அது அந்த மண்ணுக்கும் மொழிக்கும் கொடுக்குற மரியாதை” என்று நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் அல்லு அர்ஜுனின் பேச்சு தமிழ் ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்று வருகிறது. ஏற்கனவே “புஷ்பா 1” திரைப்படம் சுமார் 400 கோடி வசூலை பெற்ற நிலையில் புஷ்பா 2 திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இவர் இப்படி பேசியதுதான் நம்மூர் நடிகர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.
அல்லு அர்ஜூனை பொறுத்தவரைக்கும் பிறந்தது தமிழ்நாட்டில்தான். ஆனால் பேரும் புகழும் வந்தது எல்லாமே ஆந்திராவில். அப்படி இருந்தும் பிறந்த இந்த தமிழ் நாட்டை விட்டுக் கொடுக்காமல் பேசினார். ஆனால் கார்த்தி போன்றவர்கள் எல்லாரும் ரசிகர்களிடம் நல்ல பேரை வாங்குவதற்காக அந்தர் பல்டி அடித்து விடுகிறார்கள். அதற்கு ஒரு உதாரணம் ஆந்திராவில் ஒரு விழாவிற்கு சென்ற போது தமிழ் ரசிகர்கள் பிடிக்குமா தெலுங்கு ரசிகர்கள் பிடிக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்கு வாய் கூசாமல் தெலுங்கு ரசிகர்கள்தான் என கூறிவிட்டார். அது நம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.