விஜய்யை சந்தித்த அமரன் இயக்குநர்:
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான அமரன் திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றது. 300 கோடிக்கும் மேல் வசூலித்த இந்த படம் புதிய சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய் அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியை தனிப்பட்ட முறையில் சந்தித்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை இயக்குநர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், “12 வருடம், 2 மாதம், 1 நாள், 15 மணி நேரம் கழித்து விஜய் sir உடன் மீண்டும் ஒரு புகைப்படம் எடுத்திருக்கிறேன்” என சந்தோஷமாக குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது