அமரன் OTT தேதி வெளியிடு

Amaran movie

திரைப்படம்:அமரன்
டைரக்டர் : ராஜ்குமார் பெரியசாமி
தயாரிப்புநிறுவனம் : Rajkamal production and Sony Pictures International productions
ஸ்டார்ஸ் : சிவகார்த்திகேயன் , சாய்பல்லவி , ராகுல் போஸ் ,ஹக்கீம் ஷா
மியூசிக் டைரக்டர் : ஜி வி பிரகாஷ்
ரைட்டர்ஸ் : ராஜ்குமார் பெரியசாமி
மூவி டைப் : பயோகிராபி , ஆக்ஷன், வார்

Amaran

இது ஒரு நாட்டுப்பற்றும் உறவுகளும் கலந்த கதை,அதில் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைப் பயணத்தையும் ராணுவத்தின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர். காதல், குடும்பம், சாதனை, மற்றும் தியாகம் ஆகிய அனைத்தும் கதையில் இணைக்கப்பட்டுள்ளன.

முகுந்தின் உறுதிமொழி, காதலின் வெற்றி, குடும்பத்தை சமாதானமாக்கும் முயற்சி மற்றும் தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் ஆகியவை கதையை உணர்ச்சிவயமானதாக்கும். படத்தின் முடிவில் வீரமரணம் முக்கியக் களமாக அமைந்தாலும், அது அவரது நாட்டுப்பற்றையும் கடமையையும் முன்னிறுத்துகிறது.

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பும் கதையை மேலும் உயிர்ப்பூட்டும் எனலாம்.

காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிராக உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை மையமாகக் கொண்டு ராஜ்குமார் பெரியசாமி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட படங்களில், கதை தெரிந்திருந்தாலும் இறுதிவரை சுவாரஸியத்தை தக்கவைத்திருக்க வேண்டும். இந்த சவாலை ராஜ்குமார் வெற்றிகரமாகச் சந்தித்துள்ளார்.

முகுந்தின் மனைவி இந்துவின் பார்வையில் கூறப்படும் இந்தக் கதையில், இருவருக்குமான காதலும் உணர்ச்சிகரமான தருணங்களும் முக்கியமாக கையாளப்பட்டுள்ளன. இந்த காட்சிகள் ரசனையுடனும் மனதை நெகிழவைக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், ராணுவ வீரர்களின் ஒழுக்கம், தியாகம், அர்ப்பணிப்பு, போர்த்திறன், மற்றும் அவர்களின் இழப்புகளை நெருக்கமாகக் காட்டியுள்ள படம், பார்வையாளர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை மேலும் புரிந்துகொள்ள உதவுகிறது.

Amaran movie

அமரன் படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 5 அம தேதி ரசிகர்கள் வீட்டீலிருந்து பார்க்கலாம்.

திரைப்படம்:அமரன்
இயக்கம்:ராஜ்குமார் பெரியசாமி
நடிப்பு:சிவகார்த்திகேயன்
OTT Network: நெட்பிளிக்ஸ் (Netflix)
வெளியீடு தேதி: 05 December 24

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed