மாத்தி மாத்தி இப்படி ஒரு கண்டீசனா?.. ரஹ்மான் – சாயிரா பற்றி வெளியான தகவல்

rahman1
திரையுலகில் மிகவும் புகழ்பெற்ற இசையமைப்பாளராக இருப்பவர் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான். உலக அளவில் பிரபலமான ரஹ்மானின் வாழ்க்கையில் இப்போது பெரும் புயல் வீசியிருக்கிறது. திடீரென அவரது மனைவி சாயிரா ரஹ்மானை விட்டு பிரியப்போவதாக அவருடைய எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருந்தார்.
தனது தாய் பார்த்த பெண் சாயிரா பானுவை 1995 ஆம் வருடம் திருமணம் செய்தார் ஏ ஆர் ரகுமான். திருமணத்திற்கு முன்பே தனக்கு வரப்போகும் மனைவி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று தன் தாயிடம் மூன்று வேண்டுகோள் வைத்திருந்தாராம் ரஹ்மான். அதாவது தான் அதிகமாக படிக்கவில்லை என்பதால் தனக்கு வரப்போகும் மனைவி நன்றாக படித்து இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும், பாசமாக இருக்க வேண்டும் என்பதுதான்.
திருமணத்திற்குப் பிறகு, எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் தங்களது காதலையும், அன்பையும் அழகாக வெளிப்படுத்தி வந்த தம்பதியர்களுள் இவர்களும் அடக்கம். 29 வருடம் சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளார். அவரது மூத்த மகளுக்கு 2022 வில் திருமணம் நடைபெற்றது. அவருடைய மகன் அமீனும் இசையமைப்பாளராக இருக்கிறார்.
ரஹ்மான் எப்படி கண்டீசன் போட்டு சாயிராவை திருமணம் செய்தாரோ அதைப் போல சாயிராவுக்கும் இரண்டு ஆசைகள் இருந்ததாம். அதாவது வரப் போகும் கணவருக்கு பைக், கார் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் மற்றொன்று சரளமாக இங்கிலீஷ் பேச தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில் சாயிரா துபாயை சேர்ந்த இஸ்லாமியர் என்பதால் அவருக்கு தமிழ் தெரியவே தெரியாதாம்.
அதனால் இப்போது வரைக்கும் ரஹ்மானும் சாயிராவும் ஆங்கிலத்தில்தான் உரையாடுவார்களாம். சில மேடைகள் சாயிரா ஆங்கிலத்தில் பேச முற்படும் போது ‘தமிழ், தமிழ்’ என சொல்லி சாயிராவை கிண்டல் பண்ணுவார் ரஹ்மான். இப்படி வசந்தகாலம் வீசிக் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கையில் இப்போது புயல் வீசி வருகிறது.