Aravindsamy: அரவிந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை வேணும்.. அப்படிப்பட்டவரின் மண வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?
aravind
அழகு பதுமை என பெண்களைத்தான் கூறுவார்கள். அப்படி பெண்ணுக்கு நிகராக அழகு ரீதியாக ரசித்த நடிகர்களில் அரவிந்த்சாமி மிக முக்கியமானவர். தளபதி படத்தின் மூலம் அறிமுகமான அரவிந்த்சாமி தொடர்ந்து மணிரத்னம் படங்களில்தான் நடிக்க தொடங்கினார். தளபதி படத்தில் ரஜினி மற்றும் மம்மூட்டியை கூட ஒப்பந்தம் செய்து விட்டார்கள். ஆனால் அரவிந்த்சாமி கேரக்டருக்குத்தான் நடிகர்களை தேடிக் கொண்டிருந்தார்கள்.
ஏனெனில் அந்த கேரக்டர் மிகவும் வலுவான கேரக்டர். ரிச்சாக இருக்க வேண்டும். அதனால் அதற்கேற்ப ஒரு நபரை பிடிக்க வேண்டும் என காத்துக் கொண்டிருக்க விளம்பர படத்தில்தான் அரவிந்த்சாமியை முதன் முதலாக மணிரத்னம் பார்க்கிறார். பார்த்ததும் அரவிந்த்சாமியை புக் செய்து விட்டார். அதிலிருந்து ரோஜா படத்திற்கும் அரவிந்த்சாமியைத்தான் ஹீரோவாக்கினார் மணிரத்னம்.
அந்தப் படம் இளசுகளை புரட்டி போட்ட படமாக அமைந்தது, குறிப்பாக பெண்களை தூங்கவிடாமல் செய்த படமாகவும் மாறியது. அதற்கு காரணம் அரவிந்த் சாமிதான். அப்படிப்பட்ட அழகு. நிறம். அப்படிப்பட்ட அழகில் இருந்தார் அரவிந்த்சாமி. அந்தப் படம் வந்த பிறகு பெண்கள் அனைவரும் எதிர்பார்த்தது அரவிந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை வேண்டும் என்பதுதான்.
அப்படி அரவிந்த்சாமியே மாப்பிள்ளையாக வந்தும் அரவிந்த்சாமியின் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இருவருக்கும் விவாகரத்து ஏற்பட்டு தனியாக வாழ ஆரம்பித்திருக்கின்றனர். அப்போது அரவிந்த்சாமிக்கு 23 வயதுதான் இருக்குமாம். அதற்குள் இரண்டு குழந்தைகள். அவருடைய மனைவி குழந்தைகளும் வேண்டாம் என அரவிந்த்சாமியிடமே விட்டு சென்றுவிட்டாராம்.
தனி ஆளாக இருந்து தன் குழந்தைகளை பராமரித்து வந்திருக்கிறார். அந்த நேரத்தில்தான் அவருடைய அப்பாவும் இறக்க அம்மாவும் இறந்து போனாராம். இப்படியே போக ஒரு கட்டத்தில் அரவிந்த்சாமிக்கு ஒரு பெரிய விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதில் அவர் பிழைப்பாரா மாட்டாரா என்ற வகையில் சூழ் நிலை உருவாகியிருக்கிறது. எப்படியோ மருத்துவர்கள் அவரை பிழைக்க வைத்துவிட்டனர்.
அந்த நேரத்தில் சத்தான மாத்திரைகள், ஆண்டிபயாடிக்ஸ் என ஓவராக எடுத்துக் கொள்ள அவருடைய உடல் பருமன் பெருத்துக் கொண்டு போனது. கூடவே தலைமுடியும் உதிர வழுக்கையும் விழுந்திருக்கிறது, இப்படி பல கஷ்டங்களை கடந்து வந்தவர்தான் மறுபடியும் தனி ஒருவன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். அந்தப் படம் அவருக்கு ஒரு சரியான கம்பேக்காகவே இருந்தது. இந்த தகவலை பிரபல சினிமா தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறினார்.