காருக்குள்ள ஒரே ஜாலிதான்! பிக் பாஸ் அருணுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா

காருக்குள்ள ஒரே ஜாலிதான்! பிக் பாஸ் அருணுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா
காருக்குள்ள ஒரே ஜாலிதான்! பிக் பாஸ் அருணுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்ட அர்ச்சனா
விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் மக்களை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சியாக இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சி. 7 சீசன்களை கடந்து தற்போது எட்டாவது சீசனில் சென்று கொண்டிருக்கின்றது. அது மட்டுமல்லாமல் கடந்த ஏழு சீசன்களையும் கமல் தொகுத்து வழங்கி வந்தார். இப்போது இந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார் .
அதனால் ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு இருந்தது. ஏனெனில் நல்ல அனுபவம் உள்ள கமல் அவர் தொகுத்து வழங்கும் விதம் போட்டியாளர்களை கையாளும் விதம் அனைவரையும் கவர்ந்தது. அதைப்போல விஜய் சேதுபதி இருப்பாரா என்ற ஒரு சந்தேகம் இருந்தது.
ஆனால் ஒவ்வொரு வாரமும் விஜய் சேதுபதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவுக்கு போட்டியாளர்களை திண்டாட வைத்து வருகிறார் விஜய் சேதுபதி. அதுவும் இந்த சீசனைப் பொருத்தவரைக்கும் பெரும்பாலும் விஜய் டிவியின் பிரபலங்களே போட்டியாளர்களாக கலந்து கொண்டு இருக்கின்றனர். அதுவும் ஒரு வகையில் மக்களை ஈர்த்திருக்கிறது.
இந்த நிலையில் அருண் பிரசாத் சில தினங்களுக்கு முன்பு விஜே அர்ச்சனாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருந்தார். அவர் பிறந்த நாள் வாழ்த்து சொல்வார் என்று எதிர்பார்த்து அர்ச்சனாவும் ஒரு மணி வரை காத்திருந்தேன் என அவருடைய வலைதள பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் .
ஏற்கனவே அர்ச்சனாவும் அருண் பிரசாத்தும் காதலித்து வருவதாக ஒரு செய்தி வெளியாகி வந்தது .அதை பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் மறைமுகமாக அருண் பிரசாத்திடம் மற்ற போட்டியாளர்கள் கேட்டு கிண்டல் அடித்து வந்தனர். இந்த நிலையில் அர்ச்சனாவின் பிறந்தநாளின் போது அருண் பிரசாத் வாழ்த்துக்கள் சொன்னதும் அதற்கு அர்ச்சனாவின் ரியாக்ஷன் உண்மையிலேயே இருவரும் காதலிக்கிறார்கள் என்பதைப் போல் இருந்தது .
இந்த நிலையில் இன்று அர்ச்சனா ஒரு வீடியோவை தன்னுடைய இணையதள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதில் ஒரு காருக்குள் அர்ச்சனாவும் அருண் பிரசாத்தும் போடா போடி படத்தின் ஒரு பாடலை பாடிக் கொண்டே ஜாலியாக சுற்றுவது போல அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது. அதுதான் இப்போது வைரலாகி வருகின்றது
இதோ இந்த வீடியோ லிங்க்: https://www.instagram.com/reel/DCgg_9oPTK5/?igsh=bTJwc3d5NHF3d3dx