ஏ.ஆர்.ரகுமான் திடீர் விவாகரத்து! சற்றுமுன் ஷாக்கிங் தகவல்!

AR RAHMAN DIVORCE NEWS
ஏ.ஆர்.ரகுமான் திடீர் விவாகரத்து! சற்றுமுன் ஷாக்கிங் தகவல்!
ஆஸ்கார் விருது பெற்ற இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மானை அவரது மனைவி சாய்ரா பானு விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார், ஏறக்குறைய 30 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் அவரது மனைவி சாய்ரா பானு தம்பதியருக்கு 2 மகள்கள் 1 மகன் உள்ள நிலையில் அவர்கள் விவகாரத்தை அறிவித்துள்ளனர் ,திருமணமாகி பல வருடங்களுக்குப் பிறகு, திருமதி சாய்ரா தனது கணவர் திரு. ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து பிரிந்து செல்வது என்ற கடினமான முடிவை எடுத்துள்ளார்.
இதுகுறித்து அவரது வழக்கறிஞர் அதிகாரப்பூர்வ அறிக்கையைப் ஊடகங்கலில் பகிர்ந்துள்ளார் .
“”ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் தீர்க்க முடியாத இடைவெளிஉருவானது “
“”தீர்க்கமான யோசைனைக்கு பின்பே நாங்கள் பிரிவது என்ற முடிவை எடுத்துள்ளோம்“
“இந்த இக்கட்டான தருணத்தில் எங்களது தனிப்பட்ட உணர்வுக்கு மக்கள் மதிப்பளிக்கவேண்டும் “
எங்களது வாழ்வில் ஏற்பட்ட வலி மற்றும் வேதனையால் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக திருமதி சாய்ரா தெரிவித்தார்