தனுஷ் பாடலுக்கு நடனமாடிய நம்ம அமரன்.. திருமண விழா – அசத்திய SK
சமீபத்தில் பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் திருமணம் சென்னையில் நடைபெற்றது . அந்த திருமணத்திற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டனர். தனுஷ் ,சிவகார்த்திகேயன், சிம்பு ,நயன்தாரா, விக்ரம், அருள்நிதி என ஒட்டுமொத்த திரையுலகமே ஆகாஷ் பாஸ்கரன் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இதில் யாரும் எதிர்பாராத சில சம்பவங்களும் நடைபெற்றன. அதாவது இந்த திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தனுஷ் மீது ஒரு பெரிய அறிக்கையை நயன்தாரா வெளியிட்டு அவரது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார் .
அப்படியே திரும்பி பார்த்தால் இந்த திருமணத்தில் ஒரு பக்கம் தனுஷ் இன்னொரு பக்கம் நயன்தாரா என படையப்பா நீலாம்பரி படத்தை நம் கண் முன் காட்டியது. படையப்பா படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்தில் ரஜினிக்கு எதிராக மிகவும் கெத்து காட்டி நடித்திருப்பார் ரம்யா கிருஷ்ணன் .
https://www.instagram.com/reel/DCwsu6_BU0C/?igsh=ZnZtc29jOWU5aH
அப்படி ஒரு லுக்கில் தனுசுக்கு அருகே கால் மேல் கால் போட்டு நயன்தாரா அமர்ந்திருந்தது அனைவருக்கும் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தியது. ஆனால் அதை எதையும் கண்டு கொள்ளாமல் சர்வ சாதாரணமாக தனுஷ் அந்த திருமணத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார்.
இன்னொரு பக்கம் சிவகார்த்திகேயன் தனுஷ் இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு தங்களது அன்பை பரிமாறிக் கொண்டது ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ஒருவித மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் இருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்ததாகவும் இருவரும் பேசாமல் இருக்கிறார்கள் என்றும் பல செய்திகள் வெளி வந்தன.
ஆனால் இந்த திருமணத்தில் அவர்கள் இருவரும் கட்டியணைத்து தங்களது அன்பை பரிமாறியது அனைவருக்கும் ஒருவித ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் சம்பந்தமான ஒரு வீடியோ இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
அதில் ஆகாஷ் பாஸ்கரன் திருமண பார்ட்டியில் தனுஷும் சிவகார்த்திகேயனும் இணைந்து வேலையில்லா பட்டதாரி படத்தில் வரும் வாட்ட கருவாடு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள். அந்த ஒரு வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது
https://x.com/Dhanush_Trends/status/1860690919777005820?t=wCrW0ZAGTsVQ01jk-IY1sg&s=08