திடீர் திருப்பம் தனுஷ்- ஐஸ்வர்யா சேர்ந்து வாழ போகிறார்களா?தமிழ் திரையுலகில் தொடரும் விவாகரத்து வழக்குகள்….

Dhanush Aishwarya divorce status

திரையுலகில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக தொடர்ந்து தனது வெற்றிப் பாதையை அமைத்துக் கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் உண்மையான பெயர் வெங்கடேஷ் பிரபு கஸ்தூரிராஜா. இவர் 1983 இல் சென்னையில் பிறந்தவர். இவர் தமிழ் திரையுலகில் 2002 ஆம் ஆண்டு தனது தந்தை மற்றும் இயக்குனரான கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளிவந்த “துள்ளுவதோ இளமை” படத்தில் நாயகனாக அறிமுகமானவர். இவர் பொல்லாதவன், காதல் கொண்டேன், யாரடி நீ மோகினி, ஆடுகளம், மரியான், அனேகன், அசுரன், வடசென்னை போன்ற 50 மேற்பட்ட பல வெற்றி திரைப்படங்களில் நாயகனாக நடித்தவர் .

Cinemazo

தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் இணைந்து “wunderbar films” கம்பெனி மூலமாக வேலையில்லா பட்டதாரி, மாரி 2, காக்கா முட்டை போன்ற பல வெற்றி படங்களை தயாரித்து வெளியிட்டவர். அதுமட்டுமின்றி பாடல் ஆசிரியராகவும் பாடகர் ஆகவும் திரையுலகில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் நடிகர் தனுஷ். இவரது Why This Kolaveri பாடல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலம் அடைந்தது.

2024 இல் ஏ ஆர் ரகுமான் இசையில், தனுஷ் இயக்கி, நடித்து வெளிவந்த ராயன் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதில் “உசுரே நீதானே” மற்றும் “மஜாவா இனிக்கிறியே பஞ்சுமிட்டாய்” பாடல்கள் மிகவும் பிரபலம் அடைந்தது.

இவருக்கு 2004 இல் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுடன் திருமணம் நடைபெற்றது. இவர் தனுஷை விட இரண்டு வயது மூத்தவர் மேலும் இவருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரும் தங்களது விவாகரத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதற்கிடையில் இவர்களை சேர்த்து வைக்கும் வேலையும் அவர்களது குடும்பத்தினரால் முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அது தோல்வியிலேயே முடிந்தது.

இந்நிலையில் இன்று நடந்த அவர்களது விவகாரத்து வழக்கில், இருவரும் விவாகரத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர் . மேலும் வரும் நவம்பர் 27 ஆம் தேதி என்று தீர்ப்பு வழங்குவதாக சென்னை குடும்ப நல நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தனுஷ் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed