Ajith: மலேசியாவில் அஜித்துடன் சிறுத்தை சிவா மற்றும் ஏஎல் விஜய்.. இதான் காரணமா?
ajith (2)
அஜித் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாகும் என ஆதிக் கூறியிருந்தார்.ஏற்கனவே அஜித்தும் ஆதிக்கும் இணைந்து குட் பேட் அக்லி என்ற ரசிகர்களுக்கான ஒரு தரமான படத்தை கொடுத்தனர். அதனால் மீண்டும் அஜித் ஆதிக் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
ஏற்கனவே அஜித் அடுத்தடுத்து மீண்டும் சிறுத்தை சிவா, எச். வினோத், விஷ்ணு வர்தன் என இவர்கள் இயக்கத்தில் நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் மீண்டும் அடுத்த படமும் ஆதிக்குடன் தான் அஜித் இணைகிறார். தற்போது அஜித் கார் ரேஸில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தன்னுடைய அணியினருடன் அதற்கான பயிற்சியில் மும்முரமாக இருக்கிறார்.
மலேசியாவில் அடுத்த 24 சீரிஸ் கார் பந்தயம் நடைபெற இருக்கிறது . அதற்கான பயிற்சியில்தான் தற்போது அஜித் இறங்கியிருக்கிறார். இந்த நிலையில் கூடவே சிறுத்தை சிவாவும் இருந்தார். இது ரசிகர்களுக்கு ஒரு வித சந்தேகத்தை ஏற்படுத்தியது. ரேஸில் சிறுத்தை சிவாவுக்கு என்ன வேலை என்று அனைவரும் கேள்வி கேட்டு வந்தனர். அது பற்றிய தகவல் தான் இப்போது வெளியாகியிருக்கிறது.
ஏற்கனவே அஜித் இரண்டு விளம்பர படங்களில் நடிப்பதாக தகவல் வெளியானது. அந்த விளம்பர படத்தை எடுப்பதே சிறுத்தை சிவாதானாம் . ரேஸ் டீம்தான் அதற்கு ஸ்பான்சர் செய்கிறார்களாம். அதோடு ரேஸ் சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களையும் டாக்குமென்ட்ரியாக எடுக்க வேண்டும் என ஏற்கனவே அஜித் சொல்லியிருந்தார். அந்த டாக்குமென்ட்ரியை எடுப்பது ஏஎல் விஜயாம்.
அதனால் சிறுத்தை சிவாவும் ஏஎல் விஜயும் அஜித்துடனேயே இருந்து வருகிறார்கள். ரேஸ் சம்பந்தப்பட்ட அத்தனை விஷயங்களையும் இருவரும் கண்காணித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.