விடுதலை 2 பட விழாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்: வெற்றிமாறன் பேச்சு பாதியிலேயே நிறுத்தம்!
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து நடித்த விடுதலை திரைப்படம், இசைஞானி இளையராஜாவின் இசையுடன் பெரும் வெற்றியடைந்தது. 2023ஆம் ஆண்டு முதல் பாகம் வெளியானது. இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து, டிசம்பர் 20ஆம் தேதி வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடந்த விடுதலை 2 ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில், வெற்றிமாறன் தனது அனுபவங்கள் மற்றும் படக்குழுவினரைப் பற்றி பேசினார். பேச்சு நடுவில், ஒருவர் “அனைவரின் பெயர்களையும் குறிப்பிட வேண்டும்” என கூறியதால், வெற்றிமாறன் அதிருப்தியுடன், “நான் யார் பெயரையும் சொல்லலன்னு சொல்லிட்டேன்ல டா. டீம் நா எல்லாரும் தானாடா” என்று கூறி, கோபத்துடன் பேச்சை நிறுத்தினார்.
இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.