அரசியலில் அப்பா எதிரி.. படத்தில் மகளா? தளபதி 69 படத்தில் இணையும் வில்லி நடிகை

thalapathy 69
தளபதி 69 படத்தில் இணையும் வில்லி நடிகை
விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து தன்னுடைய முதல் பொதுக்கூட்டத்தையும் விக்கிரவாண்டியில் மிகப் பிரம்மாண்டமாக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார். இந்த பொதுக்கூட்டத்திற்கு பிறகு அவர் கடைசியாக நடிக்கும் திரைப்படமான 69 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் தற்போது மும்முரமாக இறங்கி இருக்கிறார்.
இந்த படம் தான் அவருடைய கடைசி படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை விஜயே தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்து வருவதாக செய்திகள் வெளியாகின. விஜய் என்றாலே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான நடிகர் .அதனால் சூட்டிங் சமயத்தின் இடைவெளியின் போது அவர் ரசிகர்களை சந்திப்பது வழக்கம்.
அப்படித்தான் இந்த படத்திலும் இடையிடையே ரசிகர்களை சந்தித்து தன்னுடைய அன்பை பகிர்ந்து வருகிறார். எச் வினோத் இயக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். அவர்களுடன் இணைந்து பாபி தியோல், மமீதா பைஜூ, கௌதம் மேனன் ,பிரகாஷ்ராஜ் ,பிரியாமணி, நரேன் போன்ற பல முக்கிய பிரபலங்களும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நேற்று திடீரென இந்தப் படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பது உறுதியானது. ஆனால் இன்றைய தகவலின் படி அவர் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என சொல்லப்படுகிறது .மேலும் சத்யராஜும் இந்த படத்தில் நடிப்பார் என்ற ஒரு தகவல் வெளியானது. ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக சத்தியராஜ் இந்த படத்தில் இப்போது இல்லையாம்.

இந்த நிலையில் படத்தில் பிரபல நடிகை ஒருவர் கூடிய சீக்கிரம் இணைய போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது .அவர் வேறு யாருமில்லை. நடிகை வரலட்சுமி சரத்குமார். வில்லி கேரக்டருக்கு பொருத்தமான நடிகை வரலட்சுமி சரத்குமார். தமிழை விட தெலுங்கில் இவருக்கு மார்க்கெட் அதிகம். தெலுங்கில் பல படங்களில் நடித்து அங்குள்ள ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றவர் வரலட்சுமி சரத்குமார்.
இவர் ஏற்கனவே விஜய்யுடன் இணைந்து சர்க்கார் படத்தில் வில்லியாக நடித்து கலக்கி இருப்பார். அதன் பிறகு இந்த படத்தில் அதுவும் விஜயின் கடைசி படத்தில் அவர் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியானதும் ரசிகர்கள் பலர் அரசியலில் அப்பா எதிரி என்றால் படத்தில் மகளா என விமர்சித்து வருகின்றனர்.