ஷாலினியை பாத்து கத்துக்கோங்க.. ஜோதிகாவின் லூஸ் டாக்! இப்படி ஆகிப் போச்சே

jyothika (1)
கங்குவா படம் ஒரு பக்கம் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் அந்தப் படத்திற்காகவும் கணவர் சூர்யாவுக்காகவும் ஜோதிகா போட்ட பதிவும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் கங்குவா. படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவு ரசிகர்களிடம் சரியான வரவேற்பை பெறவில்லை.
கிட்டத்தட்ட 350 கோடி செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்ட கங்குவா திரைப்படம் இதுவரை நெகட்டிவ் விமர்சனத்தையே பெற்று வருகிறது. இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்ட ஒலி மிகுந்த இரைச்சலை தருகிறது என்பதற்காக திரையரங்கு உரிமையாளர்களிடம் ஒலியில் 2 புள்ளி குறைவாக வைக்கவேண்டும் என படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கேட்டுக் கொண்டார்.
மேலும் படத்தை எப்படியாவது ஓடவைக்க பல வகைகளில் முயற்சிகளும் எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் ஜோதிகா திடீரென கோவத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். அதில் சூர்யாவின் நடிப்பை பாராட்டி பேசியதோடு படத்தில் 30 நிமிடங்கள் சரியாக இல்லை என்றும் சத்தத்திலும் அதிக இரைச்சல் இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் படத்தை இந்த அளவுக்கு நெகட்டிவ்வாக கொண்டு போக ஏன் இவ்வளவு வேலை நடக்கிறது?
இது திட்டமிட்டே நடக்கும் விஷயம் என்பது போல் பேசியிருந்தார். இது யூடியூப்பர்ஸ்கள் மத்தியிலும் பத்திரிக்கையாளர்கள் மத்தியிலும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது, பிரபல பத்திரிக்கையாளர் சிவபாலன் இதை பற்றி கூறும் போது ‘ஜோதிகா ஒன்னு பண்ணுங்க..பத்திரிக்கையாளர்கள் ஒரு 500 பேர் இருப்போம். எல்லாரையும் கட்டிப் போட்டு அடைத்துவிடுங்கள்’

‘ நீங்களாகவே மக்களுக்கு இலவசமாக படத்தை போட்டு காட்டுங்கள்.’ என்ற வகையில் கூறினார். இதே அஜித்தின் எத்தனை படங்கள் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியது? என்றைக்காவது ஷாலினி வாய் திறந்திருக்காரா? ஆஞ்சனேயா படத்தின் போது ‘இந்தப் படம் வெளியான பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் யாருனு தெரியும்’ என்று லூஸ் டாக் விட்டார் அஜித்.
அதன் பிறகு அவரை ட்ரோல் செய்து கிழி கிழினு கிழித்துவிட்டனர். அப்போது கூட ஷாலினி இனிமேல் எதையும் வெளியே பேசவேண்டாம். உங்கள் வேலை எதுவோ அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று சொன்ன பிறகுதான் அஜித் அமைதியானார் என்று சிவபாலன் கூறினார்.