Kaithi 2; கைதி 2 டிராப்பா? லோகேஷ் மீது அதிருப்தியில் இருக்கும் கார்த்தி.. அடக் கொடுமையே
karthi
லோகேஷ் கனகராஜுக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்திய படம் என்றால் கைதி திரைப்படம்தான். அதுவரை தமிழ் சினிமாவில் இப்படி ஒரே இரவில் நடக்கும் கதையுள்ள படம் வெளியானது இல்லை. இதுவே ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவத்தை கொடுத்தது. அதிலிருந்துதான் லோகேஷ் கனகராஜ் மீது தமிழ் சினிமாவின் பார்வை திரும்பியது. யாருப்பா இவரு? வித்தியாசமா படம் எடுக்கிறாரே என்ற ஆச்சரியத்தை வரவழைத்தது.
அதற்கேற்ப கைதி படத்திற்கு பிறகு விஜயுடன் மாஸ்டர் படத்தில் இணைந்தார். அதுவும் விஜய்சேதுபதியை மோசமான வில்லனாகவும் காட்ட முடியும் என்பதை நிருபித்தவரும் லோகேஷ்தான். கொடூரமான வில்லனாக மாஸ் காட்டியிருப்பார் விஜய்சேதுபதி. மாஸ்டர் திரைப்படமும் பெரிய அளவில் வெற்றியடைந்த திரைப்படமாக மாற ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் லோகேஷ் காலடியில்.
அடுத்து கமலுடன் விக்ரம் படத்தில் இணைந்தார். இந்த படத்திற்கு முன்புவரை ராஜ்கமல் நிறுவனமும் கமலும் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்க விக்ரம் படத்தால் கோடிகளை தனதாக்கினார் கமல். விக்ரம் படத்தை தன் நிறுவனம் மூலமாகத்தான் தயாரித்தார். பெரிய லாபமும் கிடைத்தது. கமலுக்கும் இந்த படம் கம்பேக் படமாக அமைந்தது. விக்ரம் படத்தின் வெற்றிதான் ரஜினிக்கும் லோகேஷுடன் இணைய வேண்டும் என்ற ஆசை வந்தது.
அதற்கிடையில் மீண்டும் விஜயை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கினார். ஆனால் லியோ படம் அவருக்கு சரியான வரவேற்பை தரவில்லை. விஜய் என்ற ஒரு பெயருக்காக மட்டுமே வசூலில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் படம் அமைந்தது. அதனை அடுத்து ரஜினியை வைத்து கூலி படத்தை எடுக்க அந்தப் படமும் எதிர்பார்த்த அளவு இல்லை. லியோ மற்றும் கூலி என அடுத்தடுத்து ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே கொடுத்து வந்தார்.

இதற்கிடையில் கைதி 2 படத்தின் பேச்சும் அடிப்பட்டது. ஆனால் கைதி படத்தின் முதல் பாகம் முடிந்ததுமே கார்த்தி கைதி 2க்காக லோகேஷிடம் கேட்டுக் கொண்டே இருந்தாராம்.ஆனால் லோகேஷ் அந்த நடிகரின் படத்தை முடித்து விட்டு வருகிறேன். இந்த நடிகரின் படத்தை முடித்து விட்டு வருகிறேன் என சொல்லி சொல்லி கார்த்தியை தட்டிக் கழித்திருக்கிறார். இது ஹீரோவாக கார்த்தியின் ஈகோவை தட்டி எழுப்பிய மாதிரி ஆகிவிட்டது. அதனால் இப்போது கைதி 2 படத்தில் கார்த்தி ஆர்வமில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் கேட்கும் போதெல்லாம் பெரிய நடிகர்களை நம்பி போன லோகேஷ் இப்போது மீண்டும் கைதி 2 பண்ணலாம்னு வரும் போது கார்த்தி அதற்கு இடம் கொடுக்கவில்லை என வலைப்பேச்சில் இது பற்றி பேசியிருக்கிறார்கள்.