கமல் படத்தால எனக்கு நிம்மதியே போச்சு.. புலம்பும் இயக்குநர்….

கமல் படத்தால எனக்கு நிம்மதியே போச்சு.. புலம்பும் இயக்குநர்….
நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக திரைத்துறையில் தனது வெற்றி பாதையை அமைத்து கொண்டவர் சுந்தர் சி. இவர் காமெடி கலந்த ஆரர் படங்கள் கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். அவர் படங்கள் குறைந்தது 2 வாரங்களுக்கு மேல் ஹவுஸ்புல் ஆக ஓடிக்கொண்டிருக்கும்.
கடந்த மே மாதம் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இத்திரை படத்தில் அசாம் மாநிலத்தில் பரவலாக நம்பப்படும் பாக் என்னும் உருமாறும் பேய் தழுவி படம் எடுக்கப்பட்டு இருந்தது. இதில் தமன்னா, ராசி கண்ணா, சந்தோஷ் பிரதாப், கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ் மற்றும் தில்லி கணேஷ் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு ஹிப் பாப் ஆதி இசையமைத்திருந்தார் மற்றும் குஷ்பூ, சிம்ரன் ஒரு பாடலுக்கு சிறப்பு நடனம் ஆடி இருந்தார்கள். மேலும் இத்திரைப்படம் 100 கோடி வசூலை பெற்றது.
இந்நிலையில் சுந்தர் சியின் பழைய வீடியோ ஒன்று சமுக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தன்னிடம் ரசிகர் ஒருவர் அன்பே சிவம் போன்ற படம் மீண்டும் நீங்கள் எடுக்காததற்கு காரணம் என்ன என்று கேட்டார் அதற்கு சுந்தர் சி அன்பே சிவம் படம் பண்ணதனால ஆதாயம் விட இழப்புகள் தான் அதிகம். நான் ரசித்து ரசித்து எடுத்த படத்தால் கிட்டத்தட்ட ஒரு வருடம் நான் வீட்டிலேயே முடங்கி இருந்தேன்.
இப்போ மக்கள் எங்க பாத்தாலும் அன்பே சிவம் படம் பிரமாதமாக இருக்கிறது ஏன் அந்த மாதிரி படம் திருப்பி எடுக்கலைன்னு கேப்பாங்க. எனக்கு கோபம் தான் வரும் சந்தோஷம் வராது. ஏன்னா அன்பே சிவம் படம் வரும்போது எல்லாரும் எங்கய்யா போனீங்க என்ன கேட்க தோணும்.
இப்ப படத்தை பார்த்துட்டு நல்லா இருக்குன்னு சொல்ராங்க, படம் வந்தப்போ எனக்கு ஆதரவு கொடுத்து இருந்தா மறுபடியும் அது போல படம் பண்ணி இருப்பேன் என்று எமோஷனல் ஆக தெரிவித்த வீடியோ சமூக வலை தளத்தில் வைரலாகி வருகிறது.
1 thought on “கமல் படத்தால எனக்கு நிம்மதியே போச்சு.. புலம்பும் இயக்குநர்….”