Vijay: விஜய்தான் வாழ்க்கை கொடுத்தாரா? உதயநிதிக்கு ஆதரவா பேசி பல்பு வாங்கிய கருணாஸ்
vijay (1)
இப்போது அரசியல் களத்தில் விஜய்க்கும் உதயநிதி ஸ்டாலினுக்கும் தான் போட்டி என்று ஒரு கருத்து பரவலாக போய்க் கொண்டிருக்கின்றது. வருகின்ற தேர்தலில் அதன் எதிரொலி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நிலையில் நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் விஜய்க்கு எதிராக திமுகவுக்கு ஆதரவாக சில கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். விஜய் அதிகளவு சம்பளம் வாங்குகிறார் என்றால் அதற்கு காரணமே ரெட் ஜெயண்ட்தான் என்று பேசி இருக்கிறார். கருணாஸின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக வலைப்பேச்சு பிஸ்மி அவருடைய கருத்துக்களை சில விளக்கங்களை கூறியிருக்கிறார்.
கருணாஸை பொருத்தவரைக்கும் ஜெயலலிதா இருந்த வரைக்கும் ஒரு மாதிரி பேசிக் கொண்டிருந்தார். எடப்பாடி பழனிச்சாமி இருந்த வரைக்கும் ஒரு மாதிரி பேசிக் கொண்டிருந்தார். அதன் பிறகு பழனிச்சாமி ஆட்சிக்கு வந்ததும் கருணாசை கண்டு கொள்ளவே இல்லை. அதனால் தான் தற்போது திமுகவுக்கு ஆதரவாக தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார். சரி விஜயை ஏன் இந்த மாதிரி விமர்சனம் செய்கிறார் என்று பார்க்கும் பொழுது எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கருத்துக்களை தொடர்ந்து பதிவிட்டு வரும் கருணாஸுக்கு கண்டிப்பாக அதிமுகவில் இடம் கிடைக்காது.
அதனால் அடுத்த ஐந்து வருடத்தில் தன்னுடைய அரசியல் பயணத்தை எப்படியாவது கொண்டு போக வேண்டும் என்பதற்கு திமுக தான் ஒரே வழி என நினைத்து அவர்களுக்கு ஆதரவாக தன்னுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். தற்சமயம் திமுகவுக்கு பெரும் சவாலாக இருப்பது விஜய் தான். அதனால் விஜய்க்கு எதிராக பேசும் போது ஸ்டாலினும் சரி உதயநிதி ஸ்டாலினும் சரி அவர்களுடைய பார்வை தன் மேல் படும் என்பதற்காக இந்த மாதிரி பேசி வருகிறார்.
ஆனால் உண்மையில் விஜய் தான் உதயநிதிக்கு வாழ்க்கை கொடுத்தார்.ரெட் ஜெயண்ட் தயாரித்த விஜயின் ஒரே ஒரு படம் குருவி. ஆனால் கருணாஸ் என்ன சொல்கிறார் என்றால் விஜய்க்கு அதிக சம்பளம் கொடுத்ததே ரெட் ஜெயம்ட்தான் என்று சொல்கிறார். குருவி படத்தின் போது விஜய் வாங்கிய சம்பளம் என்ன? இப்போது ஜனநாயகனில் விஜய் வாங்குகிற சம்பளம் என்ன என்பது பற்றி கருணாஸுக்கு தெரியுமா தெரியாதா.

சொல்லப்போனால் விஜய் குருவி படத்தில் கமிட்டானதற்கு பிறகுதான் ரெட் ஜெயண்ட் என்ற பேனரே மக்களிடம் போய் சேர்ந்தது. அதனால் விஜய்க்கு உதயநிதி வாழ்க்கை கொடுக்கவில்லை. விஜய் தான் ரெட் ஜெயண்ட்டுக்கு வாழ்க்கை கொடுத்தார் .கருணாஸ் தவறாக சொல்கிறார் .திமுகவை குஷிபடுத்துவதற்காக கூட இப்படி அவர் சொல்லலாம் என வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்திருக்கிறார்.