Rajini: விருது வாங்கிய ரஜினிக்கு தமிழ் சினிமா கொடுத்த கிஃப்ட் இதுதானா? சும்மா இல்ல.. 50 வருஷம்
rajini (1)
Rajini50: ரஜினி சினிமா துறையில் வரும் பொழுது ஒரு பக்கம் எம்ஜிஆர், சிவாஜி, கமல் இவர்கள் அனைவரும் இருந்தார்கள். இவர்கள் எப்படிப்பட்ட ஆளுமைகளாக இருந்தார்கள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ரஜினியால் எப்படி தமிழ் சினிமாவிற்கு வர முடிந்தது? அதற்கு காரணம் ரஜினியின் தனித்தன்மை தான். சினிமாவில் நிறைய பேர் வருவார்கள். போவார்கள். அதில் பல பேர் ஞாபகத்திலேயே இருக்க மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு நாம் நினைவில் இருப்பது மட்டுமல்லாமல் நிலைத்து நிற்பதற்கும் யாருக்கெல்லாம் தனித்தன்மை இருக்கிறதோ அவர்களால் மட்டும்தான் அது சாத்தியம்.
ரஜினி கமல் விஜய் அஜித் என இவர்களை எல்லாம் பட்டியல் போட்டு பார்த்தோம் என்றால் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கும். அந்த நடிகர் மாதிரி நடிக்கிறார், இந்த மாதிரி இருக்கிறார். இவர் மாதிரி நடிக்கிறார் என்று பெயர் வாங்கினால் அவர்களால் நிலைத்து நிற்கவே முடியாது. அதனால் ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். ரஜினியை பொறுத்த வரைக்கும் அவரிடம் இருந்தது அவருடைய தனி தன்மை தான். உதாரணமாக கர்நாடகாவை சேர்ந்த ரஜினி. சென்னைக்கு வந்து பிலிம் சேம்பரில் இருந்த ஒரு பிலிம் இன்ஸ்டியூட்டில் தான் அவர் படித்தார்.
அடையாறு திரைப்பட கல்லூரி மாணவர் கிடையாது. இது பிலிம் சேம்பரால் நடத்தப்பட்ட ஒரு திரைப்படக் கல்லூரி. அதில் தான் இவர் .இவர் வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் இவருடைய தமிழ் உச்சரிப்பும் மற்றவர்களிடமிருந்தும் மாறுபட்டு இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு விமர்சனத்திற்கு உரிய கேளிக்கைக்கு உரிய விஷயமாக கூட இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது உதாரணமாக ரஜினி படபடவென பேசும் பொழுது அது சரியாக புரியாமல் பல பேர் கிண்டல் பண்ணுவதற்கும் காரணமாக அமைந்தது .அதுக்காக ரஜினி தன்னுடைய ஸ்டைலை மாற்றிக் கொள்ளவே இல்லை.
இப்படி தான் என்னால் பேச முடியும் நீங்க வேணும்னா புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள் அப்படிங்கிற முறையில் அவர் அதையே ஸ்டைல் ஆக மாற்றுகிறார். அவருக்கு சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் கொடுப்பதற்கு முன்னால் அவரை ஸ்டைல் மன்னன் என்று தான் அழைத்து வந்தார்கள். சிகரெட் பிடிப்பதிலிருந்து நடப்பது நிற்பது உட்காருவது எல்லாவற்றிலும் ஒரு ஸ்டைல் இருக்கும். இது எல்லாம் தான் ரஜினியை மற்ற நடிகர்களிடமிருந்து வித்தியாசப்படுத்தி காட்டியது. இப்படித்தான் தன்னுடைய சினிமா கரியரை ஆரம்பித்தார் ரஜினி. ஆரம்பகாலங்களில் வில்லனாகவும் நெகட்டிவ் ரோலிலும் நடித்து வந்த ரஜினி பைரவி திரைப்படத்தின் மூலமாகத்தான் ஹீரோவாக முதன் முதலில் நடிக்க ஆரம்பித்தார்.

அதிலிருந்து இன்று வரை 70 வயதை கடந்தாலும் ஹீரோவாகவே தன்னுடைய அங்கீகாரத்தை தக்கவைத்துக் கொண்டு வருகிறார். இப்பேற்பட்ட சாதனைகளையும் வெற்றிகளையும் படைத்த ரஜினிக்கு இந்திய ஒன்றிய அரசு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கௌரவித்துள்ளது. ஆனால் இதைப்பற்றி எந்த ஊடகங்களோ பத்திரிகைகளோ பெரிதாக எழுதவில்லை. பார்க்கவில்லை. ஏன் தமிழ் சினிமா கூட அவரை கொண்டாடவில்லை. எக்ஸ் பக்கத்தில் ரஜினிக்கு எந்த ஒரு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்ததாகவும் தெரியவில்லை. இதுதான் நமக்கு வருத்தத்தை தருகிற விஷயமாக இருக்கிறது என இந்த தகவலை வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார்.