Anjaan: ‘அஞ்சான்’ படத்தையா கிண்டல் பண்ற? காத்திருந்து ஆர்ஜே பாலாஜியை அடித்த லிங்குசாமி
balaji
அஞ்சான் படத்தை கிண்டல் செய்த ஆர் ஜே பாலாஜிக்கு இப்போது பதிலடி கொடுத்திருக்கிறார் அந்த படத்தின் இயக்குனரான லிங்குசாமி. கடந்த 2014 ஆம் ஆண்டு சூர்யாவின் நடிப்பில் லிங்குசாமி இயக்கிய திரைப்படம் தான் அஞ்சான். அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடித்திருந்தார். படம் ஒரு கேங்ஸ்டர் திரைப்படமாக அமைந்திருந்தது. அதில் சூர்யாவின் லுக் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
குறிப்பாக அவருடைய அந்த லுக் ஹேர் ஸ்டைல் என சூர்யாவை பின்பற்றி இளைஞர்களும் அதை ஃபாலோ செய்து வந்தனர். ஆனால் அஞ்சான் திரைப்படம் எதிர்பார்த்த அளவு வரவேற்பை வரவில்லை. அது மட்டுமல்ல நெட்டிசன்கள் அந்த படத்தை வச்சு செய்தனர். அந்த நேரத்தில்தான் சோசியல் மீடியா மிகவும் பீக்கில் வளர்ந்து வந்த நேரம். அதில் அஞ்சான் திரைப்படம் சிக்கி சின்னா பின்னமானது .
பெரிய அளவில் அந்த படத்தை ட்ரோல் செய்து விமர்சித்து வந்தனர். அது மட்டுமல்ல அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் லிங்குசாமி பேசிய பேச்சும் பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. கங்குவா திரைப்படத்தை எந்த அளவு விமர்சித்து தூக்கினார்களோ அதே மாதிரி தான் அஞ்சான் திரைப்படத்தையும் கடுமையாக விமர்சித்திருந்தனர். அது லிங்குசாமியை பெரிய அளவில் பாதித்தது.
இந்த நிலையில் படத்தில் சில பல எடிட்டிங் வேலைகளை எல்லாம் செய்து நேற்று அந்த படத்தை ரீ ரிலீஸ் செய்திருக்கிறார் லிங்குசாமி. ஒரு புதிய வெர்ஷனாக அந்த படம் வெளியாகி இருக்கிறது. படம் பார்த்த அனைவரும் இப்போது படத்தை நல்ல முறையில் விமர்சித்து வருகின்றனர். பழைய வெர்ஷனில் இரண்டரை மணி நேரமாக இருந்த காட்சியை இப்போது இரண்டு மணி நேரமாக குறைத்து இருக்கிறார்.
அது மட்டுமல்ல சூரியின் போர்ஷனை கட் செய்து இருப்பதாகவும் சொல்லியிருந்தார் லிங்குசாமி. இந்த நிலையில் ஆர்.ஜே பாலாஜியை குறிப்பிட்டு ஒரு கமெண்ட்டை பதிவு செய்திருக்கிறார் லிங்குசாமி . நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆர்ஜே பாலாஜி அஞ்சான் திரைப்படத்தை கிண்டல் அடிக்கும் வகையில் அஞ்சான் படத்திற்கு 5 டிக்கெட் இருக்கு வர்றியா என கேட்டிருப்பார்.

அதை குறிப்பிட்டு ‘ரீ எடிடிங் வேலைகள் எல்லாம் செய்து படம் நன்றாக வந்திருக்கிறது. சூர்யாவுக்காக கருப்பு படத்தை அவர்தான் இயக்கிவருகிறார். இப்போது நான் கேட்கிறேன். அஞ்சான் படத்திற்கு டிக்கெட்ஸ் இருக்கு. வர்றியா என லிங்குசாமி ஆர்ஜே பாலாஜியை கிண்டலடிக்கும் விதமாக கேட்டிருக்கிறார்.