லக்கி பாஸ்கர் மூவி OTT ரிலீஸ் தேதி மற்றும் Platform
லக்கி பாஸ்கர்
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம், ஒரு முக்கிய திருப்பத்தை மையமாகக் கொண்டு நகர்கிறது. திருட்டு செயலில் ஈடுபடும் துல்கர், ஒரு கட்டத்தில் தனது செயலின் தீமையை உணர்கிறார். அதிலிருந்து தப்பிக்க அவர் எடுக்கும் முடிவுகள் மற்றும் அதனைச் சார்ந்த பிரச்சனைகள் தான் மீதிக்கதை.
இந்த திரைப்படம் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று, 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘மகாநதி’ மற்றும் ‘சீதா ராமம்’ ஆகிய படங்கள் தமிழ்நாட்டில் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றன. இவை அவரது நடிப்புத் திறனை மேலும் உயர்த்தியவை.
‘லக்கி பாஸ்கர்’ திரைப்படம் புது அளவுகோல்களை உருவாக்கி, துல்கர் சல்மானின் திரைப்பயணத்தில் முக்கியமான படியாக அமைந்துள்ளது.
திரைப்படம்: லக்கி பாஸ்கர்
இயக்கம்: வெங்கி அட்லுரி
நடிப்பு: துல்கர் சல்மான்
OTT Platform: நெட்பிளிக்ஸ் (Netflix)
வெளியீடு தேதி: 28 நவம்பர் 24
துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது, படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் ரசிகர்கள் வீட்டீலிருந்து பார்க்கலாம்.