ரீமேக் செய்யப்பட்ட அலைபாயுதே காதல் சடுகுடு சாங் இன் மெட்ராஸ் காரன்
madraskaaran movie teaser launch
ரீமேக் செய்யப்பட்ட அலைபாயுதே காதல் சடுகுடு சாங் இன் மெட்ராஸ் காரன்
‘மெட்ராஸ்காரன்’ திரைப்படம் எஸ்.ஆர். புரொடக்ஷனின் சார்பில் பி. ஜெகதீசால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ‘ரங்கோலி’ படத்தை இயக்கிய வாலி மோகன் தாஸ் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் ஷேன் நிகாம், தமிழ் நடிகர் கலையரசன், மற்றும் நடிகைகள் நிஹாரிகா, ஐஸ்வர்யா தத்தா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தின் சிறப்பு அம்சமாக, ‘அலைபாயுதே’ படத்தில் இடம்பெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் “காதல் சடுகுடு” என்ற பாடல் புதிய வடிவில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ‘அலைபாயுதே’ இயக்குனர் மணிரத்னம் மற்றும் இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், மற்றும் பாடலின் உரிமையாளரான சரிகமா நிறுவனம் முறையான அனுமதி வழங்கியுள்ளனர்.
Kaadhal Sadugudu – Video Song | Madraskaaran | Shane Nigam | Niharika Konidela | B. Jagadish
பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை நிஹாரிகா பேசியபோது, “இந்தப் பாடல் எனக்குப் பிடித்தமானது. மணிரத்னம் சார் போன்ற ஜாம்பவானின் பாடலை நாங்கள் ரீமேக் செய்வது எனக்கு பெருமையாக உள்ளது. என்னை நடனம் செய்ய ஊக்குவித்த சதீஷுக்கு நன்றி. சிறிய பயம் இருந்தாலும், பாடலுக்காக வந்த பாராட்டுகள் மகிழ்ச்சியாக உள்ளன,” என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில், நடிகை ஐஸ்வர்யா தத்தா, “’அலைபாயுதே’ என் பேவரைட் திரைப்படம். இந்தப் பாடலுக்கான அனுமதி அளித்த மணிரத்னம் சார், ஏ.ஆர். ரஹ்மான் சார், மற்றும் சரிகமாவுக்கு நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன்,” என்று கூறினார்.
madraskaaran movie teaser launch
நடிகர் ஷேன் நிகாம், தனது முதல் தமிழ்ப் படமாகிய ‘மெட்ராஸ்காரன்’ குறித்து பேசும்போது, “தன்னை நடனம் செய்ய ஊக்குவித்ததற்கு நிஹாரிகா மற்றும் படக்குழுவினருக்கு நன்றி. தமிழ்ப் படங்களின் ரசிகராக இருந்த நான், இப்போது இதில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது. வாலி மோகன் தாஸ் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி,” என்று குறிப்பிட்டார்.
https://www.youtube.com/watch?v=qlawvPU_bRE
‘மெட்ராஸ்காரன்’ திரைப்படம், தமிழ்ப் பட உலகில் சுவாரஸ்யமான படைப்பு ஒன்றாக உருவாகி வருகின்றது. இதன் பாடல் மற்றும் கதைநடிப்புகள் ரசிகர்களுக்கு புதிய அனுபவம் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ‘காதல் சடுகுடு’ பாடல் ரீமேக் மூலம், ஏ.ஆர். ரஹ்மான் இசையின் அழகு இன்னும் ஒரு முறை வெளிப்படுகிறது.