மூவி: புஷ்பா2 : The rule
டைரக்டர் : சுகுமார்
தயாரிப்புநிறுவனம் :மைத்ரி மூவி மேக்கர்ஸ் (நவீன் ஏர்னெணி , ரவி ஷங்கர் யலமஞ்சிலி)
ஸ்டார்ஸ்: பகத்பாசில் , அல்லு அர்ஜுன் ,பிரகாஷ்ராஜ் ,ஸ்ரீ லீலா,ராஷ்மிகாமந்தனா,சுனில் , அனுஷ்யா பரத்வாஜ்
மியூசிக் டைரக்டர் :தேவி ஸ்ரீ பிரசாத்
ரைட்டர்ஸ் : A.R. பிரபாவ் ,சுகுமார் ,ஸ்ரீகாந்த் விசா
மூவி டைப் : ஆக்ஷன் , கிரைம், திரில்லர்
புஷ்பா 1 படம் கடந்த 2021 இல் வெளிவந்து ரசிகர்கரிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது சுகுமார் இயக்கத்தில் மைத்ரிமூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அல்லு அர்ஜுன் நடிப்பில் இன்று ( டிசம்பர் 5) வெளியான புஷ்பா 2 : தி ரூல் முதல் காட்சியிலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது,
இப்படம் உலகம் முழுவதும் 12000 கும் மேலான திரையரங்குகளில் பல மொழிகளிலும் வெளியாகியிருக்கிறது
இப்படத்தில் அல்லு அர்ஜூனுடன் , பகத் பாசில் , பிரகாஷ்ராஜ் , சுனில் ,மற்றும் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா , ஸ்ரீ லீலா , மேலும் பல முக்கிய கதாபாத்திரத்தில் முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தில் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கு ஏற்றவாறு முற்றிலும் மிரட்டலான கதாபாத்திரத்தில் நடித்து மறுபடியும் ரசிகர்களின் உள்ளத்தில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
மேலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் மியூசிக் மற்றும் பீஜியம் ஒவ்வொவரு காட்சியிலும் படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கிறது. இப்படத்தில் பல தோற்றங்களில் அல்லு அர்ஜுன் வலம் வருகிறார். ரஷ்மிகா மந்தனா கலக்கலான கெட்டப்பில் வந்து ரசிகர்களை உற்சாக படுத்தியுள்ளார். ஃபைட் சீன்கள் படத்தின் பலம் .
புஷ்பா 2: தி ரூல் திரைப்படத்தின் ட்ரெய்லரை பார்த்தவுடன் ஏற்படும் ஆவல், முழு திரைப்படத்தையும் திரையில் அனுபவிக்கச் செய்யும். படத்தின் ஆரம்பமே மாஸ் காட்சிகளால் திரையரங்கில் சலசலப்பை உருவாக்க, அல்லு அர்ஜுனின் கேரக்டரைக் கதையின் உச்சத்தில் கொண்டு செல்கிறது. சுகுமாரின் திறமையான இயக்கத்துடன், சக்திவாய்ந்த நடிப்பாளர்களான அல்லு அர்ஜுன் மற்றும் ஃபஹத் பாசில் இணைந்து, ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்களை கைதட்டச் செய்யும் விதமாக உருவாக்கியுள்ளனர்.
படத்தின் திரைக்கதையே அதனுடைய முதன்மை பலம். கதைக்களம் மிக சுவாரஸ்யமாக அமைந்ததுடன், மாஸ் படங்களில் எதிர்பார்க்கப்படும் பஞ்ச் வசனங்கள் இதில் மிக அழுத்தமாக இருக்கின்றன. அல்லு அர்ஜுனின் ஸ்டைலிஷ் தோற்றம், அழுத்தமான நடிப்பு, மற்றும் அவரது தனித்துவமான அணுகுமுறை, புஷ்பராஜ் கதாபாத்திரத்தில் உயிர் ஊட்டியுள்ளது. சுகுமாரின் ஆழமான கதைபோக்கும், சித்தூரின் கிராமப்புறத்தின் மாறுபட்ட வாழ்வையும் செம்மரம் கடத்தலின் சர்வதேச பின்புலத்தையும் விரிவாக சித்தரிக்கிறது.
அல்லு அர்ஜுனின் ஸ்லோ-மோஷன் நடைகள், மாஸ் காட்சிகளில் ரசிகர்களின் விசில்களையும் கூச்சல்களையும் உண்டாக்குகின்றன. அதற்குப் பிறகு, ஃபஹத் பாசிலின் SP ஷேகாவத் கதாபாத்திரம், ஒரு சிக்கலான மற்றும் சைக்கோவிதமான காவல் அதிகாரியாக, திரைக்கதையை மேலும் விறுவிறுப்பாக மாற்றுகிறது. புஷ்பாவுக்கும் ஷேகாவத்துக்கும் இடையிலான மோதல்கள், படத்தின் முக்கிய கட்டங்களை நிர்மாணிக்கின்றன.
ரஷ்மிகா மந்தனாவின் ஸ்ரீவல்லி கதாபாத்திரம், பெண்கள் மீது வைக்கப்படும் சமூக கட்டுப்பாடுகளை தகர்த்தெறிய தனது தன்னம்பிக்கையான நடிப்பால் அசத்துகிறது. அவரது கதாபாத்திரம் மட்டும் அல்லாமல், அல்லு அர்ஜுனுடன் இருக்கும் அவர்களின் செமிஸ்ட்ரியும் படத்தின் அடையாளமாக விளங்குகிறது.
படம் முழுவதும் எதிர்பாராத திருப்பங்களால் நிரம்பியிருக்கிறது. அதிரடி சண்டைக் காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை, மற்றும் புஷ்பா தன்னுடைய தனித்துவமான உடை மற்றும் நடையுடன் மயக்கும் மாஸ் காட்சிகள் ரசிகர்களை திரையரங்கில் மூழ்கடிக்கின்றன.
2024 ஆம் ஆண்டின் மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள புஷ்பா 2: தி ரூல், மாஸ் மற்றும் கிளாஸ்க்கு இடையே சரியான சமநிலையை சாதிக்கிறது. அழகான காட்சிகள், பரபரப்பான திரைக்கதை, மற்றும் மனதை கவரும் நடிப்புடன், படம் ஒரு முழுமையான திரையரங்கு அனுபவமாக அமைந்துள்ளது.
மொத்தத்தில், அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 ஒரு மாபெரும் வெற்றி. இது ரசிகர்களுக்கான விருந்தாக மட்டுமின்றி, தமிழ் திரையுலகில் மாஸ் திரைபடங்களின் தரத்தையும் உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது. திரையில் இந்த திரைப்படத்தை பார்க்க தவறாதீர்கள்!
படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் மிகவும் ரசிக்கத்தக்கதாகவும் மற்றும் உணர்ச்சிபூர்வமாக இயக்குனர் சுகுமார் கட்சிதமாக வடிவமைத்திருக்கிறார் .
மொத்தத்தில் புஸ்பா 2 ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களுக்கு ஒரு நல்ல விருந்தாகும்
இந்த திரைப்படமும் புஷ்பா 1 போல நல்ல வசூலை பெரும் என திரைப்பட குழுவினர் மற்றும் அவரது ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
சொர்க்கவாசல்
டைரக்டர் :சித்தார்த் விஸ்வநாத்
தயாரிப்பு நிறுவனம் : Swipe Right Studios and Think Studios
ஸ்டார்ஸ் : ஆர் ஜே பாலாஜி ,செல்வராகவன், நட்ராஜ் ,கருணாஸ் ,ஹக்கீம் ஷா மற்றும் சானிய ஐய்யப்பன்
மியூசிக் டைரக்டர் :கிறிஸ்டோ சேவியர்
ரைட்டர்ஸ் : சித்தார்த் விஸ்வநாத் ,தமிழ் பிரபா , அஸ்வின் ரவிச்சந்திரன்
மூவி டைப் : சைக்காலஜிக்கல் திரில்லர் , ஆக்ஷன், கிரைம்
அறிமுக இயக்குனரான சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் நேற்று வெளியான சொர்க்கவாசல் படத்தில் ஆர் ஜே பாலாஜி முற்ற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு திறனை நிரூபித்திருக்கிறார்,
இப்படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து செல்வராகவன் ,நட்டி என்ற நட்ராஜ் , கருணாஸ் , ஹக்கீம் ஷா மற்றும் கதாநாயகியாக சனியா ஐய்யப்பன் மேலும் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சொர்க்கவாசல் படத்தின் கதைக்களம் சென்னை மத்திய சிறையில் 1999 கால கட்டத்தில் நகர்கிறது ,
ஆர் ஜே பாலாஜி ஒரு சிறிய கையேந்தி பவன் நடத்தி வருகிறார் அதன் மூலம் ஒரு நல்ல ஹோட்டல் திறக்கவேண்டும் என்று அதற்கான முயற்ச்சிகளை எடுத்து வருகிறார் மேலும் அவர் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றும் தனது அம்மாவை நன்றாக பார்த்து கொள்ளவேண்டும் என்ற ஒரு இளைஞருக்கான காணவுகளோடு வாழ்ந்து வரும் நேரத்தில் திடீரென போலீஸாரால் கைது செய்யப்பட்டு மத்திய சிறை சாலைக்கு செல்கிறார்,
இதனிடையில் செல்வராகவன் மத்திய சிறையில் கைதியாக இருந்துகொண்டே ,போதை மருந்து கடத்தல் , கட்ட பஞ்சாயத்து கொலை என பல குற்றங்களை செய்து ஒட்டு மொத்த சென்னையும் தனது கண்ட்ரோலில் வைத்திருக்கிறார் ,
அப்போதுதான் ஆர் ஜே பாலாஜிக்கும் செல்வராகவனுக்கும் இடையே ஒரு மோதல் நடக்கிறது அற்கடுத்து என்ன நடக்கிறது என்பதயே விறுவிறுப்பாகமாவும் ஆக்ஷன் நிறைந்த காட்சிகளாக படம் நகர்கிறது
சிறைக்குள் செல்வராகவனால் அவர் அனுபவிக்கும் கஷ்டங்கள் துன்பங்களின் காட்சிகளை தத்ரூபமான நடிப்பில் நடித்து அசத்திருக்கிறார் ஆர் ஜே பாலாஜி
இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத்திற்கு இது முதல் படமாக இருந்தாலும் திரை கதையிலும் ,ஒவ்வொரு காட்சிகளிலும் விறுவிறுப்பு குறையாமல் படத்தை இயக்கியிருக்கிறார்
இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப்படம் பெரும் வரவேற்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.