சம்பாதித்த மொத்த பணமும் போச்சு..புலம்பும் பிரபல சின்னத்திரை நடிகை .

Myna Nandhini episode breakdown

சம்பாதித்த மொத்த பணமும் போச்சு.. புலம்பும் பிரபல சின்னத்திரை நடிகை .

சின்னத்திரையில் தனது நகைச்சுவை திறமையால் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மைனா நந்தினி . மதுரையைச் சேர்ந்த இவர் வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். மேலும் அவர் கேடி பில்லா கில்லாடி ரங்கா, வெள்ளைக்கார துரை, ரோமியோ ஜூலியட், காஞ்சனா 3,  அரண்மனை 3, விக்ரம் போன்ற பல திரைப்படங்களில் சிறப்பு நகைசுவை கதாபாத்திரங்களில் நடித்தவர்.

Myna Nandhini episode breakdown

Myna Nandhini episode breakdown

அவர் சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோகளின் போட்டியாளராகவும், ஜட்ஜ் ஆகவும் வலம் வந்து கொண்டு இருப்பவர். கிச்சன் சூப்பர் ஸ்டார் சீசன் 3, மிஸ்டர் & மிஸஸ் கில்லாடி, நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம், அந்தக்காகசம், உம் சொல்றியா ஊகூம் சொல்றியா போன்ற பல ரியாலிட்டி ஷோகளில் கலந்து கொண்டு ஒரு கலக்கு கலக்கியவர். கலக்கப்போவது யாரு மற்றும் நகைச்சுவை கில்லாடிகள் போன்ற ரியாலிட்டி ஷோகளில் ஜட்ஜ் ஆக இருந்தவர். தனது தனி திறமையாலும் நகைசுவை திறமையாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

Myna Nandhini episode breakdown

2017 இல், தான் காதலித்த கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டார். திருமணமான 6 மாதங்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கார்த்திக் தற்கொலை செய்து கொண்டார். சிறிது கால இடைவெளிக்கு பிறகு 2019 இல் தொலைக்காட்சி மற்றும் நகைச்சுவை நடிகருமான யோகேஸ்வரனை மணந்தார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது.

இவர்களுக்கு சொந்தமான youtube சேனலில் அவ்வப்போது அவரது பர்சனல் அப்டேட்களையும், சில குறும்படங்களையும் வெளியிடுவது உண்டு. தற்போது அவர் சேனலில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் வெப் தொடரை பாதியில்நிறுத்த போவதாக அறிவித்துள்ளார்.

அதற்கு காரணம், அவர் சமீபத்தில் இலங்கைக்கு சென்று இருந்ததாகவும், வெப் சீரிஸ்காக பல நாட்கள் தங்கி இருந்து எடுத்த 800 GB காட்சி பதிவுகளை ஒரு ஹோட்டிஸ்க் கில் போட்டு வைத்திருந்ததாகவும், இந்தியா வரும்போது அது தவறுதலாக கீழே விழுந்து வேலை செய்யாமல் போனதாக மிக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். தங்கள் உழைப்பு, பணம் எல்லாம் வீணாக போனதாக அவர் கணவரும் சேர்ந்து புலம்புகிறார் மைனா நந்தினியோகேஸ்வரன் தம்பதியினர்.

https://youtu.be/d7PeIYTdxq0?si=cTyub97UROg6YHso

 

https://cinemazotamil.com/samantha-and-naga-chaitanya-latest-news/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed