Ajith: யாருமே படத்தை வாங்க வரல.. அஜித்தின் ரெண்டு சூப்பர் ஹிட் படங்களுக்கு இந்த நிலைமையா?

ajith (1)

Ajith:

அஜித்தின் ஜனா படத்தால்தான் தயாரிப்பாளர் காஜா முகைதீன் பெரும் கடன் சுமைக்கு ஆளானார் என்ற தகவல் எல்லாருக்குமே தெரியும். ஆனால் இவரால்தான் ரிலீஸ் பிரச்சினையில் இருந்த அஜித்தின் இரண்டு படங்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. ஒன்று வாலி திரைப்படம், மற்றொன்று அவள் வருவாளா திரைப்படம். அவள் வருவாளா படத்தை பார்த்துவிட்டு யாருமே வாங்க முன் வரவில்லையாம்.

அந்த நேரத்தில் காஜா முகைதீன் NS ஏரியாவை வாங்கியிருக்கிறார். மற்ற ஏரியாக்களை வாங்க யாருமே ஆர்வம் காட்டாத நிலையில் காஜா முகைதீன் தனக்கு தெரிந்தவர்களிடம் சொல்லி வாங்க சொல்லியிருக்கிறார். இப்படித்தான் அவள் வருவாளா திரைப்படம் ரிலீஸ் ஆகியிருக்கின்றன. ஆனால் அந்தப் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட். அதை போல் வாலி படத்திற்கும் இப்படியொரு பிரச்சினைதான்.

இந்தப் படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்திதான் தயாரித்தார். அதுமட்டுமில்லாமல் நிக் ஆடியோவையும் வைத்திருந்தார். அவர் காஜா முகைதீனிடம் வந்து ‘எனக்கு வாலி படத்திற்கான ஆடியோவை கொடுங்க சார்’னு கேட்டாராம். சரிஙக் வாங்கிக்கோங்கனு சொல்லிட்டாராம். அந்தப் படத்தின் ஆடியோ பத்து லட்சமாம். இரண்டு லட்சம் அட்வான்ஸ் கொடுத்து சக்கவர்த்தி போய்விட்டாராம்.

kaja
kaja

பாடல்கள் எல்லாம் சூப்பரான பாடல்கள். ஆடியோவை ரிலீஸ் பண்ணும் நேரத்தில் என்னிடம் பணம் இல்லை, இரண்டு லட்சம் கம்மியா இருக்குனு சொல்லி கேட்டிருக்கிறார். காஜாமுகைதீனும் சரினு கொடுத்துவிட்டு, படத்தையும் ரிலீஸ் பண்ணுங்கனு சொல்லிவிட்டாராம். படம் ரிலீஸ் ஆகி அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட். கிட்டத்தட்ட 8 லட்சத்துக்கு வாங்கி 80 லட்சம் வரை கலெக்‌ஷன் பண்ணியதாம் வாலி திரைப்படம்.

அந்த 80 லட்சத்தில் தான் வாலி படம் முடிந்தது. இதை யாரும் மறுக்கவும் முடியாது. மறக்கவும் முடியாது. ஏதோ அந்தப் படம் வெளியாவதற்கு பின்னாடி நானும் இருந்தேன். அந்தப் படத்தின் சிட்டி ரைட்ஸை வாங்கி படத்தை ரிலீஸ் பண்ணேன் என காஜாமுகைதீன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed