கே எஸ் ரவிக்குமாரை விட பெரிய ரவுடியா நீ.. உண்மையை பகிரங்கமாக போட்டு உடைத்த நடிகர்..

vijay sethupathi

k s ravikumar

திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் கே எஸ் ரவிக்குமார். தனது திரைபயணத்தை, 90களில் தொடங்கிய இவர் இயக்கிய படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட் படங்களாக மற்றும் வணிகரீதியாக பெரும் வெற்றி பெற்றவை. புரியாத புதிர், சேரன் பாண்டியன், சக்திவேல், நாட்டாமை, பெரிய குடும்பம், தெனாலி, தசாவதாரம் மற்றும் பஞ்சதந்திரம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் சமீப காலமாக பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் “கே எஸ் ஆர் ஷோ”  மூலம் திரைப்படக் குழுவினர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

இந்நிகழ்ச்சியின் மூலமாக சமீபத்தில் விடுதலை 2 பட குழுவினருடன் நேர்காணல் இருந்தது. இதில் பிரபல நடிகர் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் மற்றும் பரோட்டா சூரி போன்றோர் கலந்து கொண்டனர். இதில் மூவரும் விடுதலை2 படத்தினை பற்றியும் மற்றும் தங்களது வாழ்வில் நடந்த சில சுவாரசியமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டனர்.  அப்போது விஜய் சேதுபதி, கே எஸ் ரவிக்குமார் சாரும் நானும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்ற சுவாரசியமான தகவலை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். மேலும் தனக்கு செகண்ட் இயரில் தீனதயாளன் என்ற ப்ரொபசர் இருந்ததாகவும், அவரைப் பார்த்து வம்பு செய்து முறைத்த மாணவனை பார்த்து ‘நீ என்ன கேஸ் ரவிக்குமாரை விட பெரிய ஆளா?, நான் அவரே ஹேண்டில் பண்ணவன்’ என்று வகுப்பறையில் ஒரு முறை கூறியதாக விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில், கிரைம் மற்றும் திரில்லர் படமான விடுதலை1 திரைப்படம் கடந்த 2023 வருடம் திரையில் வந்து மாபெரும் வெற்றி பெற்றது. இதில் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்ற கேரக்டரிலும், சூரி கான்ஸ்டபிளாகவும் மற்றும் படத்தின் நாயகனாகவும் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து விடுதலை2, கடந்த 20ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படத்தில் சூரி, விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சு வாரியர், போஸ் வெங்கட் சேத்தன், இளவரசு, பாலாஜி சக்திவேல் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். ‘ தினம் தினம் உன் நெனப்பு’ மற்றும் ‘மனசுல மனசுல ஒரு மாதிரியா இருக்கு’ என்ற பாடல் வெளிவந்து வைரலாகி கொண்டிருக்கிறது.

https://cinemazotamil.com/allu-arjun-movie-allu-arjun-movie/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed