பிரசாந்தை கிளாமரா காட்ட இயக்குனர் செஞ்ச வேலை.. ஹீரோயினே தோத்துட்டாங்க

New Project (2)

திரைத்துறையில் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராக வலம் வந்து கொண்டிருபவர் சுந்தர் சி. இவர் இயக்குனர் மணிவண்ணனின் உதவியாளராக இருந்து முறைமாமன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், கலகலப்பு போன்ற வெற்றி படங்களை இயக்கியவர்.

ஆனாலும் இவரது சில திரைப்படங்கள் சரியாக ஓடவில்லை. அதாவது ஐந்தாம் படை, குரு சிஷ்யன், நகரம் உள்ளிட்ட படங்கள் வெற்றி பெறவில்லை. ஆனாலும் இவரது விடாமுயற்சியின் காரணமாக அதற்கு அடுத்து வந்த திரைப்படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக மாறின. இவர் நகைச்சுவை கலந்த ஹாரர் திரைப்படங்கள் எடுப்பதில் மிகவும் திறமையானவர். இவரது அரண்மனை 4  இந்த ஆண்டு திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்றது.

prsanth-and-sundar-c-winner-movie-glamour

இந்நிலையில் அவர் பிரபல பேட்டி ஒன்றில் நடிகர் பிரசாந்த்துடன் வின்னர் படம் பற்றி சுவாரசியமான தகவலை ஒன்றினை பகிர்ந்து கொண்டார். அதாவது நாங்கள் அந்த படத்தின் கிளைமாக்ஸ்ஸில் “எந்தன் உயிர் தோழியே” ரொமான்டிக் பாடலை பிளான் செய்திருந்தோம். ஆனால் பாடல் கடைசியாக வருவதால் யாரும் அமர்ந்து பார்க்க மாட்டார்கள் அதனால் ஹீரோயின் மட்டும் இல்ல நீங்களும் கிளாமரா இருக்கணும் னு சொல்லி இவரையும் சட்டையில் இரு பட்டனை கழட்ட சொல்லி அந்த பாடலை எடுத்ததாக சுந்தர் சி கிர்ந்து கொண்டார். இத்திரைப்படத்தில் வடிவேலு, கிரண் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். இந்த காட்சிகள் யூடியூபில் வைரலாகி வருகிறது.

https://cinemazotamil.com/tamil-news-tamil-news/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed