இதென்னடா ‘புஷ்பா 2’க்கு வந்த சோதனை! படம் பார்க்கும் போதே பறி போன உயிர்

pushpa 2 public talk
இதென்னடா ‘புஷ்பா 2’க்கு வந்த சோதனை! படம் பார்க்கும் போதே பறி போன உயிர்
கடந்த ஐந்தாம் தேதி அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்படமான புஷ்பா 2 உலகெங்கிலும் ரிலீசாகி வசூலில் சாதனை படைத்து வருகிறது. நேற்று நான்காவது நாள் வசூலாக 829 கோடி வசூலித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
இதன் மூலம் அசால்டாக இந்த படம் 1500 கோடி வசூலை நிச்சயமாக அடையும் என திரைப்படத் துறையில் ஒரு பேச்சு அடிபட்டு வருகின்றது. புஷ்பா 2 படத்தை பற்றி பல விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். அந்த அளவுக்கு ஆக்சன் மாஸ் என ரசிகர்களுக்கான படமாக அமைந்திருக்கிறது புஷ்பா 2.
pushpa 2 public talk
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான இதன் முதல் பாகமும் ரசிகர்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்று 400 கோடிக்கும் அதிகமான வசூலை அடைந்தது. முதல் பாகமே பெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் ஆரம்பத்தில் இந்த படத்திற்கு திருஷ்டி விழுந்தால் போல ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி குள்ளாக்கியது.
அதிகாலை 4 மணி காட்சியை காண வரும்போது கூட்டத்தில் சிக்கி ஒரு பெண் உயிர் இழக்க கூடவே அவருடைய சிறு வயது மகனும் அந்தக் கூட்டத்தில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
இதனால் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இன்னொரு பக்கம் உயிரிழந்த அந்தப் பெண் குடும்பத்தின் பொருளாதாரத்திற்கு நான் பொறுப்பு என அல்லு அர்ஜுன் வாக்குறுதியும் அளித்திருந்தார். இந்த நிலையில் இன்று மீண்டும் ஒரு சோகமான சம்பவம் நடந்திருக்கிறது.
pushpa 2 public talk
புஷ்பா 2 படத்தை ஆந்திராவில் உள்ள அனந்தபுரத்தில் இருக்கும் ஒரு திரையரங்கில் வெளியிட அந்த படத்தை பார்த்த 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபர் உடல்நலம் குறைவு ஏற்பட்டு திரையரங்கிலேயே மரணம் அடைந்திருக்கிறார். அவர் இறந்ததை அறிந்தும் சம்பந்தப்பட்ட திரையரங்கு ஊழியர்கள் படத்தை நிறுத்தாமல் தொடர்ந்து படத்தை ஒளிபரப்பி வந்தார்களாம். இதனால் ஊழியர்களுடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட உடனே போலீசார் அங்கு விரைந்து படத்தை திரையிடுவதை நிறுத்தி விசாரணை நடத்தி வருகிறார்களாம்.
https://www.youtube.com/watch?v=HtmlDoXttNg&t=10s