நான் உயிரோடு உள்ளவரை முயற்சி தொடரும் – செல்வராகவன்!
நான் உயிரோடு உள்ளவரை முயற்சி தொடரும்
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற தரமான படங்களை வழங்கிய செல்வராகவன், தற்போது 7ஜி ரெயின்போ காலனி 2 இயக்கத்தில் பிஸியாக உள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டியில், “புதுப்பேட்டை 2 சினிமாவின் ஸ்கிரிப்ட் 80% முடிவடைந்தது. இது முழுவதும் பையனின் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டது. இப்படத்தின் மிகப்பெரிய சவால், இதில் நட்சத்திரங்களை ஒன்றிணைப்பதே. ஆனால், என் வாழ்நாளில் புதுப்பேட்டை 2 திரைக்கு வர எந்த விதத்திலும் முயற்சிகளை நிறுத்தமாட்டேன்,” “நான் உயிரோடு இருக்கும் வரை புதுப்பேட்டை 2 உருவாக்கம் தொடரும்,” என இயக்குனர் செல்வராகவன் உறுதியுடன் தெரிவித்துள்ளார் செல்வராகவனின் இந்த உறுதியான நிலைப்பாடு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதோடு, படத்திற்கான பிரம்மாண்டமான தயாரிப்பை வலியுறுத்துகிறது.
மேலும் Dream warrior picture தயாரிப்பில் ஆர் ஜே பாலாஜி நாடிப்பில் நவம்பர் 29் ஆம் தேதி வெளியாகவுள்ள சொர்க்கவாசல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது