புஷ்பா 2 நடிகையுடன் வெளிநாட்டிற்கு உல்லாச பயணம் சென்ற நடிகர்….
தமிழ், தெலுங்கு, கன்னட மற்றும் ஹிந்தி திரையுலகில் உச்சத்தில் இருப்பவர்களில் நடிகை ரஷ்மிகா மந்தனாவும் ஒருவர். இவர் மற்றும் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த புஷ்பா 2 திரைப்படம் வசூலில் சாதனை படைத்தது. இந்த படத்தில் ரஷ்மிகாவின் சம்பளம் 10 கோடி என சினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திரைபடத்தில் இவரது தாராள கவர்ச்சி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது என்றே சொல்லலாம்.
இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலித்து வருவதாக கிசு கிசுக்கள் வந்த வண்ணமாக இருக்கிறது. இருவரும் அதனை வெளிப்படையாக இன்னும் தெரிவிக்கவில்லை. ஆனால் அவ்வப்போது இருவரும் ஜோடியாக வெளியே சுற்றுவதை ரசிகர்கள் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து இணையதளங்களில் வெளியிடுவது வாடிக்கையாகவே இருந்து வருகிறது. கடைசியாக புஷ்பா 2 ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, தொகுப்பாளர் அவரது காதலை பற்றி கேட்டதற்கு சுற்றி வளைத்து ஏதோ பதில் சொல்லி எஸ்கேப் ஆனார் ரஷ்மிகா.
Rashmika mandhana and Vijay devarakonda
இந்நிலையில் நேற்று ரஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டாவும் ஒன்றாக ஏர்போர்ட் வந்து இருக்கிறார்கள். இருவரும் வெளிநாட்டிற்கு உல்லாச பயணம் செல்வதாக ரசிகர் வட்டாரங்களில் பேச்சு மற்றும் அந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி அனைவராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
https://cinemazotamil.com/prsanth-and-sundar-c-winner-glamour/