காதலுக்காக கத்தி சண்டையை கைவிடும் காதலன்… மிரட்டலான ரெட்ரோ ஆனது சூர்யா 44… டைட்டில் டீஸர் வெளியீடு..
2D என்டர்டைன்மெண்ட் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவர இருந்த சூர்யா 44 திரைப்படத்திற்கு ரெட்ரோ என பெயர் மாற்றம் செய்து டைட்டில் டீஸரை வெளியிட்டது படக்குழு. இத்திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் மற்றும் கருணாகரன் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இத்திரைப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
கிறிஸ்துமஸ் நாளை இன்னும் கோலாகலமாக்க இத்திரைப்படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டுள்ளது என ரசிகர் வட்டாரத்தில் பேச்சு. டீஸர் தொடக்கத்தில், கோவிலில் சூர்யா-பூஜா ஹெக்டேயுடன் அமர்ந்து, உனக்காக நான் கோவத்தை விட்டு விடுகிறேன், என் அப்பாவுடன் சேர்ந்து அடிதடியை விட்டுவிடுகிறேன், சிரிக்க சந்தோஷமா இருக்க கத்துக்குறேன் என்றவாறு தொடங்கும் உரையாடலின் நடுவே அடிதடி, சண்டை, காதல், மாஸ் காட்சிகள் என மாறி மாறி இடம் பெறுகின்றன. இது கேங்ஸ்டர் படமாக மட்டுமில்லாமல், காதல் திரைப்படமாகவும் உருவாகியுள்ளது.
சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜின் காம்பினேஷன் தரமான சம்பவமாக இருக்கும் இந்த டீஸரை ஷேர் செய்து ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். மேலும் இந்த மஸான டீஸர் ரசிகர்களிடையே படத்தின் மீதான பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதோ ரெட்ரோ படத்தின் டீஸர் :
https://cinemazotamil.com/ajith-and-shalini-at-pv-sindhu-marriage-reception/