அவரை பாத்து தான் நானும் இதை செய்ய ஆரம்பிச்சிட்டேன் நடிகர் ஆர் ஜே பாலாஜி.
ரேடியோ ஜாக்கி, காமெடியன், திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகராக திரை துறையில் வலம் வந்து கொண்டிருப்பவர் ஆர் ஜே பாலாஜி. இவரது கிரிக்கெட் கமெண்ட்ரிக்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்புண்டு. சென்னையை சேர்த்த இவர் பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்து பிரபலமடைந்தவர். இவர் நடித்த தீயா வேல செய்யணும் குமாரு, மூக்குத்தி அம்மன், வடகறி, வீட்ல விஷேசம் போன்ற பல திரை படங்கள் மாபெரும் வெற்றி பெற்றவை. நானும் ரவுடிதான் படத்தின் காமெடிகள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. தனது கடின உழைப்பால் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்.
அறிமுக இயக்குனரான சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் தற்போது நேற்று வெளியான சொர்க்கவாசல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது படத்தில் ஆர் ஜே பாலாஜி முற்ற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு திறனை நிரூபித்திருக்கிறார்,
இப்படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து செல்வராகவன் ,நட்டி என்ற நட்ராஜ் , கருணாஸ் , ஹக்கீம் ஷா மற்றும் கதாநாயகியாக சனியா ஐய்யப்பன் மேலும் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்
இதில் இவர் சிறை கைதியாக நடித்துள்ளார். இது இவரின் நடிப்பு திறமைக்கு ஏற்ற சிறந்த திரை படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் பரவலாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பிரபல பேட்டி ஒன்றில், நடிகர் மயில்சாமி பற்றி மனம் திறந்த இவர் நானும் மயில்சாமி அண்ணனும் ஒரு கார்ல போயிட்டுஇருந்தோம். அப்போ திடீர்னு காரை நிறுத்த சொல்லிட்டு இறங்கி போய், அங்க ரோடு போட்டுட்டு இருந்தவங்க கிட்ட தன் பையில் வெச்சிட்டு இருந்த காச எடுத்து எல்லார்கிட்டயும் குடுத்தார். திரும்பி வந்தவர், “அவங்க முகத்துல எவ்ளோ சந்தோசம் பாத்தீங்களா தம்பி, ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்” என்றார். அன்னைக்கு இருந்து நானும் என்கிட்ட எப்போதும் பணம் வச்சிருப்பேன், இது நான் அவர பாத்து கத்துகிட்ட பெரிய பாடம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார்.