ஏஆர் ரஹ்மான் போனா என்ன? டிரெண்டிங் இசையமைப்பாளரை தட்டி தூக்கிய ‘சூர்யா 45’ படக்குழு..

surya 45

surya 45

சூர்யாவை வைத்து ஆர் ஜே பாலாஜி இயக்கும் புதிய படத்திற்கான பூஜை சமீபத்தில்தான் பொள்ளாச்சியில் அமைந்துள்ள மாசாணியம்மன் கோயிலில் நடைபெற்றது. தற்போது சூர்யா கார்த்திக் சுப்புராஜுடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் நெகட்டிவ் விமர்சனத்தையே பெற்றது. இதற்கிடையில் சூர்யா 45 படத்தின் அறிவிப்பு வெளியாகி ஓரளவு ஆதரவை தந்தது.

இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. ஆனால் திடீரென படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் விலகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார். இதற்கு பின்னணியில் ஏதேனும் காரணம் இருக்கிறதா என ரசிகர்கள் படக்குழுவினரிடம் கேட்டு வருகின்றனர். ஏற்கனவே விவாகரத்து பிரச்சினையின் காரணமாக ஏஆர் ரஹ்மான் மன வேதனையில் இருக்கிறாரா என்ற கோணத்திலும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஆனால் ஏஆர் ரஹ்மான் தானே அந்தப் படத்திலிருந்து விலகியிருப்பதாக தெரிகிறது. ஒரு வேளை மற்ற படங்களில் பிஸியாக இருப்பதினால் இந்தப் படத்திற்கு கால்ஷீட் பிரச்சினை காரணமாக கூட விலகியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா 45 படத்திற்கு புதிய இசையமைப்பாளராக ஆசா கூட ஆல்பம் புகழ் சாய் அபியங்கர் இசையமைக்கப் போவதாக தகவல் தெரிவிக்கின்றது.

sai
sai

ஆசா கூட ஆல்பம் சாங் பட்டிதொட்டியெல்லாம் பரவி மிகவும் ஹிட்டான ஆல்பம். இந்த ஆல்பம் பாடல் மூலமாகவே சாய் அபியங்கர் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறார். இவர்தான் இப்போது சூர்யா 45 படத்தில் இசையமைப்பாளராக பணியாற்ற இருக்கிறாராம். இவர் ஏற்கனவே லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் படத்திற்கும் இசையமைக்க இருக்கிறார்.

கங்குவா படத்தின் சர்ச்சையே இன்னும் ஓய்ந்தபாடில்லை. அதற்குள் சூர்யா 45 படத்திலிருந்து ஏஆர் ரஹ்மான் திடீரென விலகியது பல கேள்விகளை எழுப்ப காரணமாக அமைந்து விட்டது. உண்மையிலேயே என்ன காரணம் என்பதை படக்குழு அறிவித்தால்தான் தெரியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed