முன்னாள் கணவருக்கு காஸ்ட்லியான கிப்ட் கொடுத்து அசத்திய சமந்தா..
முன்னாள் கணவருக்கு காஸ்ட்லியான கிப்ட் கொடுத்து அசத்திய சமந்தா..
சமந்தா தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர். இவர் தென்னிந்திய நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் முன்னணியில் இடம் பிடித்திருப்பவர். தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்தார்.இவர்களது திருமணம் 2017 கோவாவில் நடந்தது.
நடிகை சமந்தா கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர். நாக சைதன்யா இந்து மதத்தைச் சார்ந்தவர். எனவே இரண்டு மத முறைப்படி திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. மிகவும் மகிழ்ச்சியான தம்பதிகளாக வளம் வந்து கொண்டிருந்த நடிகர் நடிகைகளில் இவர்களது பெயரும் அடக்கம். பின்னர் 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர்.
நடிகை சமந்தா சமீபத்தில் நடித்து அமேசான் பிரைமில் வெளிவந்த “சிட்டாடல் ஹனி பனி” வெப் சீரிஸ் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. ஹாலிவுட் ஹிட் அடித்த இத்திரைப்படத்தில் வருண் தவான், நடிகை சமந்தா உட்பட மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து இத்திரைப்படத்தை பிரமோஷன் செய்யும் விதமாக அமேசான் பிரைமில் நடிகர் வருண் தவான் மற்றும் சமந்தா ஒருவரை ஒருவர் நேர்காணல் செய்யும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிகிறது.
இதன் முன்னோட்டம் இப்போது அமேசான் பிரைமில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் வருண் தவான் சமந்தாவிடம், “நீங்கள் உங்கள் வாழ்க்கையில் தேவையில்லாமல் எதற்காக அதிக நேரம் செலவு செய்திருக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார். இதற்கு சமந்தா, “அது என் எக்ஸ்க்கு நான் கொடுத்த விலைமதிப்பற்ற கிப்ட்” என்று சிரித்துக் கொண்டே கூறினார். மேலும் இவர் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் டெலிட் செய்யாமல் இன்னும் அப்படியே இருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
1 thought on “முன்னாள் கணவருக்கு காஸ்ட்லியான கிப்ட் கொடுத்து அசத்திய சமந்தா..”