Samantha: என்னது கல்யாணம் ஆயிடுச்சா? சமந்தா திருமணம் குறித்து வெளியான அப்டேட்

saman1

saman1

Samantha Marriage: தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக இருந்தவர் சமந்தா. இப்போது தெலுங்கிலும் தன்னுடைய ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார். அது மட்டுமல்ல ஹிந்தியிலும் ஒரு சில வெப் சீரிஸ்களில் நடித்து வருகிறார். சமீபகாலமாக லைம் லைட்டில் இருந்து வரும் சமந்தாவை பற்றி தற்போது ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தி இயக்குனரான ராஜ் நிடிமொருவை சமந்தா ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி வருகிறது.

சமந்தாவை வைத்து சிட்டடல் ,தி ஃபேமிலி மேன் போன்ற வெப் சீரிஸ்களை இயக்கியவர் தான் ராஜ் நிடிமொரு .அதிலிருந்து இருவருக்கும் இடையே நட்பு ஆரம்பமானது. அந்த நட்பு அப்படியே காதலாக மாறியது. அதிலிருந்து ராஜுவும் சமந்தாவும் அடிக்கடி வெளியில் சுற்றுவது தங்களுடைய குடும்ப விழாக்களில் இருவரும் சந்தித்துக் கொள்வது என பல புகைப்படங்கள் வீடியோக்கள் வெளியாகின.

அப்போதிலிருந்து ராஜூவை சமந்தா திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்ற ஒரு தகவல் வெளியாகிக் கொண்டு வந்தது. ஆனால் அதைப் பற்றி இருவரும் எந்த ஒரு அறிக்கையும் விடவில்லை. 2014 ஆம் ஆண்டு நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா நான்கு வருடங்கள் தொடர்ந்து அந்த திருமண வாழ்க்கையில் பயணித்தார். அதன் பிறகு நாக சைதன்யாவிற்கும் சமந்தாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்தனர்.

sam2
sam2

விவாகரத்துக்கு பிறகு நாக சைதன்யா பிரபல நடிகை சோபிதாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சமந்தா விவாகரத்துக்கு பிறகு தான் சினிமாவில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். புஷ்பா படத்தில் ஊ சொல்றியா பாடல் மூலம் மீண்டும் தனது செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பித்தார் சமந்தா. அதிலிருந்து அவருடைய மார்க்கெட் உச்சத்தில் சென்று கொண்டே இருந்தது.

சொல்லப்போனால் அந்தப் பாடலுக்கு பிறகு தான் சமந்தாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள். இந்த நிலையில் இன்று கோயம்புத்தூரில் உள்ள ஈஷா பவுண்டேஷனில் நடைபெற்ற ஒரு தனியார் விழாவில் சமந்தாவும் ராஜூவும் அதிகாரப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர் என்ற ஒரு தகவல் வெளியாகி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed