உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்க்கு பாராட்டி காஸ்ட்லியான கிப்ட் கொடுத்து பாராட்டிய முன்னணி நடிகர்…

Sivakarthikeyan - Chess champ Gukesh

Sivakarthikeyan - Chess champ Gukesh

சின்னத்திரையில் இருந்து வெள்ளிதிரைக்கு வந்த முன்னணி நடிகர்களுள் சிவகார்த்திகேயனும் ஒருவர். அவர் நடித்து வெளிவந்த அமரன் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதோடு அதிகமான வசூல் பெற்ற படங்கள் வரிசையில் இந்த திரைப்படமும் ஒன்று. அமரன் படத்தில் ராணுவ வீரராக நடித்து தமிழக மக்கள் அனைவரின் மனத்திலும் நீங்க இடம் பிடித்துள்ளார். அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் மூன்று படங்கள் தயாராகி கொண்டிருக்கிறது.

Amaran

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற கிராண்ட் மாஸ்டர் குகேஷை நேரில் சந்தித்து அவருக்கு சர்ப்ரைஸ் கிப்ட் ஒன்று கொடுத்திருக்கிறார். சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற செஸ் உலக சாம்பியன்ஷிப்-ல் வெற்றி பெற்று, உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற இளம் வீரர் என்ற பெருமையும் குகேஷுக்கு கிடைத்தது.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அலுவலகத்தில் வரவைத்து குகேஷுக்கு கேக் வெட்டி பாராட்டினார் . அதுமட்டுமல்லாமல் விலை உயர்ந்த வாட்ச் ஒன்றையும் அவருக்கு பரிசாக கொடுத்திருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed