மிர்ச்சி சிவா வின் “சூது கவ்வும் 2” வெளியீடு! நாடும் நாட்டு மக்களும்

மிர்ச்சி சிவா வின் “சூது கவ்வும் 2” வெளியீடு! நாடும் நாட்டு மக்களும்
மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகியுள்ள ‘சூது கவ்வும் 2’, ‘நாடும் நாடு மக்களும்’ என்ற துணைதலைப்புடன் எஸ்ஜே அர்ஜுன் இயக்கத்தில் விரைவில் திரைக்கு வர தயாராக உள்ளது. 2013-ல் வெளியான நலன் குமரசாமியின் கல்ட் கிளாசிக் ‘சூது கவ்வும்’ படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இப்படம், 2024 டிசம்பர் 13-ல் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த படத்தில் மிர்ச்சி சிவா, ஹரிஷா, ராதா ரவி, கருணாகரன், எம்.எஸ். பாஸ்கர், கராத்தே கார்த்தி, ரகு, யோகி ஜாபீ, அருள்தாஸ், கல்கி மற்றும் கவி போன்ற நடிகர்கள் நடிக்கின்றனர். முதல் பாகத்துடன் தொடர்புடைய பல தனித்துவமான அம்சங்கள் இரண்டாம் பாகத்தில் இடம் பெற்றுள்ளன.
வெளியீட்டு தேதியை அறிவித்த தயாரிப்பாளர் சிவி குமார், நண்பர்கள் ஆதரிக்கவும், பகிரவும்” எனக் குறிப்பிட்டார்.
தொழில்நுட்ப கலைஞர்கள் பட்டியலில், எட்வின் லூயிஸ் இசையமைக்க, கார்த்திக் கே. தில்லை ஒளிப்பதிவு செய்ய, அஷ்வின் படத்தொகுப்பு செய்யப் பொறுப்பாக உள்ளனர்.
மேலும் மிர்ச்சி சிவாவிற்கு இது ஒரு அபார வெற்றி படமாக அமையும் என்று படக்குலு மற்றும் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது