சொர்க்கவாசல் எப்படி இருக்கு படம் பார்க்கலாமா?
சொர்க்கவாசல்
டைரக்டர்:சித்தார்த் விஸ்வநாத்
தயாரிப்பு நிறுவனம் : Swipe Right Studios and Think Studios
ஸ்டார்ஸ்: ஆர் ஜே பாலாஜி ,செல்வராகவன், நட்ராஜ் ,கருணாஸ் ,ஹக்கீம் ஷா மற்றும் சானியா ஐய்யப்பன்
மியூசிக் டைரக்டர்:கிறிஸ்டோ சேவியர்
ரைட்டர்ஸ்: சித்தார்த் விஸ்வநாத் ,தமிழ் பிரபா , அஸ்வின் ரவிச்சந்திரன்
மூவி டைப்: சைக்காலஜிக்கல் திரில்லர் , ஆக்ஷன், கிரைம்
அறிமுக இயக்குனரான சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் நேற்று வெளியான சொர்க்கவாசல் படத்தில் ஆர் ஜே பாலாஜி முற்ற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்பு திறனை நிரூபித்திருக்கிறார்,
இப்படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து செல்வராகவன் ,நட்டி என்ற நட்ராஜ் , கருணாஸ் , ஹக்கீம் ஷா மற்றும் கதாநாயகியாக சானியா ஐய்யப்பன் மேலும் பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்
உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட சொர்க்கவாசல் படத்தின் கதைக்களம் சென்னை மத்திய சிறையில் 1999 கால கட்டத்தில் நகர்கிறது ,
ஆர் ஜே பாலாஜி ஒரு சிறிய கையேந்தி பவன் நடத்தி வருகிறார் அதன் மூலம் ஒரு நல்ல ஹோட்டல் திறக்கவேண்டும் என்று அதற்கான முயற்ச்சிகளை எடுத்து வருகிறார் மேலும் அவர் காதலிக்கும் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்றும் தனது அம்மாவை நன்றாக பார்த்து கொள்ளவேண்டும் என்ற ஒரு இளைஞருக்கான காணவுகளோடு வாழ்ந்து வரும் நேரத்தில் திடீரென போலீஸாரால் கைது செய்யப்பட்டு மத்திய சிறை சாலைக்கு செல்கிறார்,
இதனிடையில் செல்வராகவன் மத்திய சிறையில் கைதியாக இருந்துகொண்டே ,போதை மருந்து கடத்தல் , கட்ட பஞ்சாயத்து கொலை என பல குற்றங்களை செய்து ஒட்டு மொத்த சென்னையும் தனது கண்ட்ரோலில் வைத்திருக்கிறார் ,
அப்போதுதான் ஆர் ஜே பாலாஜிக்கும் செல்வராகவனுக்கும் இடையே ஒரு மோதல் நடக்கிறது அற்கடுத்து என்ன நடக்கிறது என்பதயே விறுவிறுப்பாகமாவும் ஆக்ஷன் நிறைந்த காட்சிகளாக படம் நகர்கிறது
சிறைக்குள் செல்வராகவனால் அவர் அனுபவிக்கும் கஷ்டங்கள் துன்பங்களின் காட்சிகளை தத்ரூபமான நடிப்பில் நடித்து அசத்திருக்கிறார் ஆர் ஜே பாலாஜி
இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத்திற்கு இது முதல் படமாக இருந்தாலும் திரை கதையிலும் ,ஒவ்வொரு காட்சிகளிலும் விறுவிறுப்பு குறையாமல் படத்தை இயக்கியிருக்கிறார்
இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்தப்படம் பெரும் வரவேற்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.