தனக்கு பிடித்த 2 நடிகர்களை பற்றி மனம் திறந்த இயக்குனர்…

Sundhar c speaks about kowndamani and Actor shiva
இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகராக தமிழ்த்திரையுலகில் வலம் வந்து கொண்டிருபவர் சுந்தர் சி. உள்ளத்தை அள்ளித்தா, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், நாம் இருவர் நமக்கு இருவர், கலகலப்பு போன்ற படங்களை இயக்கியவர். நகைச்சுவை கலந்த ஹாரர் திரைப்படங்கள் எடுப்பதில் மிகவும் திறமையானவர். இவரது அரண்மனை 4 இந்த ஆண்டு திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து “கலகலப்பு 3″ பட வேலைகள் தொடங்க உள்ளதாக அவரது மனைவி நடிகை குஷ்பு அதிகாரபூர்வமாக அறிவித்ததை அடுத்து, படத்தில் சிவா, விமல் நடிக்க உள்ளதாக சுந்தர் சி தெரிவித்திருந்தார். படத்திற்கான மற்ற நடிகர் நடிகைகளை தேர்வு செய்வதில் பிஸியாக உள்ளார் சுந்தர் சி. இதில் கலகலப்பு 1 பட குழுவினருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அவர் பிரபல பேட்டி ஒன்றில், தனக்கு மிகவும் பிடித்த மற்றும் நடிக்க வைக்க சுலபமான 2 நடிகர்களை பற்றி மனம் திறந்துள்ளார். அதில் முதல் நபர் கவுண்டமனி. அதாவது, மேட்டுக்குடி படத்தில் மிகவும் நார்மலான சீன் அக்கா மகளுக்கு லவ் லெட்டர் எழுதுவது. அதை கவுண்டமனி அண்ணன் ஒரு மெட்டு போட்டு “அக்கா மகளே இந்து” என்று அந்த சீனை பெரிய ஹிட் ஆக்கிவிட்டார். “அவரோடு வேலைசெய்யும்போது பெருசா சீன்லாம் யோசிக்க தேவையில்லை, அவரு வந்தாலே ஆட்டோமெட்டிக்கா டெவெலப் ஆகிடும்” என கூறினார்
அதேபோல தான் சிவாவும் கலகலப்பு படத்துல, “நான் யாரு காசு குடுத்தாலும் வாங்குவேன்” னு ஒரு டயலாக் சொல்லுவாரு. இது மொக்கா டயலாக்தான், ஆன சிவா பேசின ஹிட் ஆகிடும் னு தோணுச்சு. அதேபோல ஹிட் ஆகிடுச்சு. “ரொம்ப சாதாரண டயலாக்க சிவா வெச்சு சீரியஸ்அ பேச வெச்சு ஹிட் பண்ணிடலாம்” என்று சிரித்துக்கொண்டே கூறினார்.