LIK Movie:பணத்தை அள்ள நினைக்கும் தயாரிப்பாளர்.. அடம்பிடிக்கும் விக்னேஷ் சிவன்
lik1
LIK Movie:
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அடுத்து வெளியாக கூடிய திரைப்படம் எல் ஐ கே. அவர் கடைசியாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை இயக்கினார். அதன் பிறகு ஒரு நீண்ட இடைவெளி. இடையில் அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு வந்தது. சில பல காரணங்களால் அஜித் படத்திலிருந்து விலகும் படியான சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நேரத்தில்தான் பிரதீப் ரங்க நாதனை வைத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனை தேடி வந்தது. அந்த படம் தான் எல் ஐ கே.
இந்த படம் டிசம்பர் 18ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி செட்டி நடிக்கிறார். இவர்களுடன் எஸ் ஜே சூர்யா மற்றும் சீமான் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.
காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் திரைப்படம் மட்டுமே மக்களை மனம் கவர்ந்த திரைப்படமாக இருந்தது. அதன் பிறகு ரசிகர்களைக் கவரும் படி விக்னேஷ் சிவன் எந்த ஒரு படத்தையும் கொடுக்கவில்லை. இப்போது எல் ஐ கே திரைப்படம் தான் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது.
இந்தப் படமும் ஒரு பேண்டஸி காதல் கதைகளத்தை மையமாக வைத்து எடுத்திருக்கிறார். இந்த நிலையில் ரிலீஸ் தேதி நெருங்கும் வேளையில் படத்தில் ஒரு பிரச்சனை ஆரம்பித்திருக்கிறது. படத்தின் தயாரிப்பாளர் லலித் இந்தப் படத்தின் மொத்த நேரத்தை குறைக்கும் படி சொல்லி இருக்கிறார். படத்தின் மொத்த ஓட்ட நேரம் இரண்டு மணி 37 நிமிடம். இதை இன்னும் குறைத்து இரண்டு மணி 15 நிமிடமாக மாற்ற சொல்லி இருக்கிறாராம்.
அதற்கு காரணம் ஒரு நாளைக்கு நான்கு வேளை காட்சியை ஐந்து வேளை காட்சியாக மாற்றுவதற்கும் பிசினஸ் அளவில் வசூலும் கொஞ்சம் அதிகமாக இருக்கும் என்பதாலும் இந்த ஐடியாவை கொடுத்திருக்கிறாராம். ஆனால் விக்னேஷ் சிவன் அதற்கு உடன்படவில்லை. அதனால் இது பற்றிய பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னும் படம் ரிலீசாக இரண்டு வாரங்கள் உள்ள நிலையில் தயாரிப்பாளரும் இயக்குனரும் இப்படி மோதிக் கொள்கிறார்கள் என சமூக வலைதளங்களில் தகவல் வெளிவந்து கொண்டிருக்கின்றன.